
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்
பதிகங்கள்

நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய்
ஒன்று மகாரம் ஒருமூன்றோ டொன்ற வை
சென்று பராசத்தி விந்துசயந் தன்னை
ஒன்ற உரைக்க உபதேசந் தானே.
English Meaning:
Secret Way of Bindu ConquestIntone sound ``Si`` (the first sound of Panchakshara)
In your Prana (life breath)`s silent thought
Merge in ``Aum`` — the sound cluster of ``A, U, M``
Thus ParaSakti reach;
That indeed is the way of Bindu Conquest
—This the Mystic Secret (upadesa)—you hold.
Tamil Meaning:
(நீயே விந்து சயத்தைப் பெற்று விடலாம் என்று நினையாமல்) திருவருளும் அம்முயற்சியில் தலைப்பட்டு உடன் நிற்றற்பொருட்டுத் திருவைந்தெழுத்தில் உயிராய் உள்ள சிகாரத்தின் பொருளாகிய சிவனை அகார உகார மகாரங்களோடு உடன் வைத்துத் தியானிக்க விந்து சய மார்க்கத்தைப் பிறருக்கு உபதேசிக்கும் பொழுதும் இவ்வாறே உபதேசிப்பாயாக.Special Remark:
`பிரணவ யோக முறையால் விந்து சயம் எளிதில் பெறலாம்` எனக்கூற வந்தவர் `அதனைச் சிவத்தியானத்தோடு செய்யல் வேண்டும்` என்பதை இவ்வாற்றால் கூறினஆர். ``சிகாரம்`` என்றது அதனால் குறிக்கப்படும் பொருளை. ``நினைக்கும்`` என்றது `நினைக்கப் படும்` என்றபடி. `பிராணனாய் நினைக்கும்` என முடிந்து, அதன்பின் `அதனை` என்பது வருவித்து `ஒன்றவை` என முடிக்க. `பராசத்தி சென்று விந்து சயந்தன்னை ஒன்ற` என முதலிற்கூட்டியும், உபதேசம் ஒன்று உரைக்க` என இறுதியில் மாற்றியும் பொருள் கொள்க.இதனால், சிவத்தியானத்தோடு கூடிய பிரணவயோகம் விந்து சயத்தைத் தருதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage