
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்
பதிகங்கள்

மேலாம் நிலத்தெழும் விந்துவும் நாதமும்
கோலால் நடத்திக் குறிவழி யேசென்று
பாலாம் அமுதுண்டு பற்றறப் பற்றினால்
மாலா னதுமாள மாளுமவ் விந்துவே.
English Meaning:
Bindu is Assimilated in Body Through YogaDirect Prana breath to Bindu and Nada
That in cranium Sphere arises,
Upward through Sushumna Nadi
By devices appropriate;
Thus you reach to the nectar divine;
Hold on to it,
That Bindu in you indissolubly dissolves,
Your illusions to disappear.
Tamil Meaning:
விந்து ஆறு ஆதாரங்களில் மேல் ஆதாரமாகிய ஆஞ்ஞையில் தோன்றும்; அதற்கு மூலமாகிய பொருள் ஏழாம் தானமாகிய மதி மண்டலத்தில் தோன்றும். ஆகையால், பிராண வாயுவையும், அதனால் எழும் மூலாக்கினியையும் சுழுமுனை வழியாகச் செலுத்தி ஒவ்வோர் ஆதாரமாகக் கடந்து மதி மண்டலத்தை அடைந்து அங்கே உண்டாகின்ற அமிர்தத்தை உண்டு கொண்டே மாதினை ஆசையின்றித் தழுவினால், மையல் உண்டாகாது. அஃது உண்டாகாதாகவே விந்துவும் வெளிப்படாது அகத்திலே நிற்கும்.Special Remark:
விந்துவிற்கு மூலமாதல் பற்றி அங்ஙனம் ஆகின்ற அப்பொருளை ``நாதம்`` என்றார். சுழுமுனையை, `தண்டு` என்னும் வழக்குப்பற்றி, ``கோல்`` என்றார். நடத்துதற்குச் செயப்படுபொருள் மேலெல்லாம் கூறியவாற்றால் வந்தியைந்தன. பால் - இடம். `உரிய இடத்தில்` என்றபடி. ``உண்டு`` என்னும் வினையெச்சம் `நோக்கிச் சென்றான்` என்பது போல உடன் நிகழ்ச்சிகண் வந்தது. பற்றுதற்குச் செயப்படுபொருள் முன்னை மந்திரத் தொடர்பால் வந்து இயைந்தது.இதனால், மேல், ``காலின்கண் வந்த கலப்பறியாரே`` எனக்கூறிய கலப்பு இத்தன்மையது என்பது அறிவிக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage