
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்
பதிகங்கள்

விடுங்காண் முனைந்திந் திரியங்களைப் போல்
நடுங்கா திருப்பானும் ஐயைந்தும் நண்ணப்
படுங்காதல் மாதின்பால் பற்றற விட்டுக்
கடுங்கால் கரணம் கருத்துறக் கொண்டே.
English Meaning:
Sublimate Sex ActEmbrace the damsel,
Your five sense organs with her five conjoining;
But, detached your passion for the women be;
Like the senses that are Godward sublimated
Be calm; excited be not;
Control your breath, senses and mind,
Concentrated be your thought,
Thus emit your Bindu.
Tamil Meaning:
மண் முதல் புருடன்காறும் உள்ள இருபத்தைந்து கருவிகளும் தன்னை வந்து வாதிக்கும் பொழுது அவற்றால் சலனம் உறுதல் இன்றி இருக்கின்ற யோகியும் ஒரோ ஒருகால் பெண்ணின்பால் காதல் கொள்கின்றவனாவான் ஆயினும் அப்பொழுதும் அவன் அவள் மேல் பற்றுக்கொள்ளாது, போக காலத்தில் மிகுதியாய் இயங்குகின்ற பிராண வாயுவின் இயக்கத்தால் மெலிவடைகின்ற அந்தக் கரணங்களை அகமுகப் படுத்தி, முன் பஞ்சேந்திரியங்களைத் தன் வசப்படுத்தியது போலவே விந்துவையும் தன் வசப்படுத்தியே விடுவான்.Special Remark:
`தன் வசப்படுத்தியே விடுவான்` என்றதனால், `விடாது நிறுத்தவும் செய்வான்` என்பது பெறப்பட்டது. விடுதல் மாதின் இன்ப நிறைவின் பொருட்டாம். பஞ்சேந்திரியங்களை வெல்லுதலாவது அவற்றைத் தன் வசப்படுத்தலேயாதல் போல, `விந்து சயம்` என்பதும் அதனைத்தன் விருப்பப்படி ஆளுதல் என்பதேயாம் என்றபடி. காண், முன்னிலையசை. ``ஐயைந்தும் நண்ண`` என்பதை மூன்றாம் அடியின் முதற்கண் வைத்து அங்கு நின்றும் நேரே சென்றுரைக்க. மெய்வருந்தித் தொழில் செய்யுங் கால் மூச்சுப் பெருமூச்சாய் இயங்குதல் போலக் கலவிக் காலத்திலும் அவ்வாறியங்குதல் பற்றி, ``கடுங்கால்`` - என்றார். உயிர்ப்பு நெட்டுயிர்ப்பாய காலத்தில் அந்தக்கரணங்கள் சோர்வடைதல் இயற்கை. அது பொழுது அவற்றை உலகர் செயலற்றனவாகவே இருக்கச் செய்வர். யோகியர் அது பொழுது அவற்றைத் தம் தியானப் பொருளிலே ஒடுங்கச் செய்தல் பற்றி, ``கடுங்கால் கரணம் கருத்துறக் கொண்டு`` என்றார். `காலால் என உருபு விரிக்க. கருத்து - தியானப்பொருள்.இதனால், யோகிகள் விந்து சயம் பெறுமாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage