
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்
பதிகங்கள்

மாதரை மாய வருங்கூற்றம் என்றுன்னக்
காதல தாகிய காமம் கழிந்திடும்
சாதலும் இல்லை சதகோடி யாண்டினும்
சோதியி னுள்ளே துரிசறும் காலமே.
English Meaning:
Lust is Death`s MessengerIf you hold women as Death`s messengers,
Love`s passion vanishes away;
Death there is none;
For ages innumerable will you in Divine Light be,
Your Impurities forever totally rid.
Tamil Meaning:
விந்து இழப்பிற்குக் காரணம் பால் உணர்ச்சியே யாகலின், அதனை மகளிரை அந்தப் பாலினராகக் கருதாமல், அங்ஙனம் கருதுபவர்க்கு அதனால் வரும் அழிவுபற்றி அவரைக் கொல்ல வரும் கூற்றுவனாகவே கருதின் அவர்மேல் செல்கின்ற ஆசையும், அதனால் எழும் பால் உணர்ச்சியும் நீங்கிவிடும். அவை நீங்கவே விந்து இழக்கப் படாதாகலின், அதனால் மனித ஆயுள் அளவேயன்றி, மேலும் பல்லாண்டு செல்லினும் இறப்பு வாராது. இனி அந்நாட்கள் எல்லாம் பரம்பொருளின் உள்ளே குற்றமற்றிருக்கும் நாட்களாயும் அமையும்.Special Remark:
`மாய வரும்` என இயையாது, `மாயக் கூற்றம்` என்றியைத்து, `இஃது உண்மை வடிவில் வாராது, வேறொரு வஞ்ச வடிவில் வருகின்ற கூற்றம்` என்று உரைத்தலும் பொருந்தும். காதலது - காதலின்கண் உண்டாவது. ``காலமே`` என்பதன்பின் `உளதாகும்` என்னும் பயனிலை எஞ்சிநின்றது.இதனால், `விந்து சயம் பெற விரும்புபவன் மாதர் ஆசையை வெறுத்தலே சிறப்பு` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage