
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்
பதிகங்கள்

வறுக்கின்ற வாறும் மனத்துலா வெற்றி
நிறுக்கின்ற வாறும்அந் நீள்வரை யெட்டில்
பொறிக்கின்ற வாறும்அப் பொல்லா வினையை
அறுக்கின்ற நாள்வரும் அத்தப் பழமே.
English Meaning:
Fry Bindu and End BirthFry the Bindu, Mind its balance winning;
Raise it high, to mount of Sushumna;
That way, your interminable Karmas are scorched;
Then the day you pluck away
The Fruit of Fig that holds
The seeds of birth, innumerable.
Tamil Meaning:
விந்துவை வற்றச் செய்யும் முறையும், மனம் எங்கும் உலாவருவதில் அடைகின்ற வெற்றியைத் தடுத்து நிறுத்தும் முறையும், அந்த வெற்றியை எட்டுத் திக்கிலும் உயர்ந்து நிற்கின்ற மலைகளில் எழுதிப் புகழ் பெறுதலும் ஆகிய எல்லாம் உடம்பு வினைத் தொடர்பை அறுத்துக்கொள்கின்ற காலத்திலேதான் ஒருவனுக்குக் கைவரும்.Special Remark:
வறுத்தலுக்குச் செயப்படு பொருளாகிய `விந்து` என்பது அதிகாரத்தால் வந்து இயைந்தது. மனோலயம் எய்தப் பெற்றாரது புகழ் எட்டுத்திக்கும் பரவுதல்.``இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு`` 3
என்பதனாலும் விளங்கும். `அஸ்தி` என்னும் வடசொல் தமிழில் `அத்தி` எனத்திரிந்து வரும் ஆதலின் அதனை நாயனார் உடம்பைக் குறித்தற்குச் சிலேடை நயம்தோன்ற வழங்குவர். `அத்திப் பழமும், அறைக்கீரை நல்வித்தும்`` என்னும் மந்திரஉரை பார்க்க உடம்பை எடுத்து உழல்கின்ற உயிரினது செயலை உடம்பின்மேல் ஏற்றி, ``அத்திப்பழம் வினையை அறுக்கின்ற நாள்`` என்றார்.
இதனால், முன் மந்திரத்திற் கூறிய விழுப் பயன் வினை நீங்கப் பெற்றார்க்கே கூடுவதாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage