
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி
பதிகங்கள்

தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தர
வடிவார் திரிபுரையாம் மங்கை சங்கைச்
செடியார் வினைகெடச் சேர்வரை என்றென்
அடியார் வினைகெடுத் தாதியு மாமே.
English Meaning:
She Uproots KarmasShe is of hands bedecked in jewellery,
She is Fountain of Bliss Divine,
She is Beautiful,
She is Tiripurai of Loveliness Perfect,
She is Mount Kailas
That all Karma destroys
She for ever uproots the Karmas
Of Her devotees;
She is the Primal One.
Tamil Meaning:
வளையல் அணிந்த கைகளையுடையவளும், இன்பத் தோற்றத்திற்குக் காரணமாயிருப்பவளும், அழகிய வடிவத்தை யுடைய `திரிபுரை` என்னும் தேவியும் ஆகிய சத்தி, ஐயத்திற்குக் காரண மாயுள்ள கீழான முன்னை வினைகள் கெடுதலினால் தன்னை உணர்ந்து வந்து அடைபவர்களை, `என் அடியார்கள்` என்று சொல்லி ஏற்று, அவர்கட்கு, மேல் வினை வாராமல் காக்கின்ற தலைவியாயும் நிற்பாள்.Special Remark:
`சுந்தரி` என்பது பாடமாகாமை அறிக. `சேர்வாரை` என்பது குறுகிநின்றது. `என் அடியார் என்று வினை கெடுத்து` எனக் கூட்டுக. ``ஆதியும் ஆம்`` என்னும் உம்மை, இறந்தது தழுவிய எச்சம்.இதனால், பூரணசத்தியைத் தெளிந்து அடைந்தோர் வினைக்கட்டு நீங்கி வீடுபெறுதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage