
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி
பதிகங்கள்

பாலனு மாகும் பராசத்தி தன்னொடு
மேலணு காவிந்து நாதங்கள் விட்டிட
மூலம தாம்எனும் முத்திக்கு நேர்படச்
சாலவு மாய்நின்ற தற்பரத் தாளே.
English Meaning:
Beyond Bindu and Nada, She isYouthful forever you shall be;
Transcending Bindu and Nada
That approach Her not,
You shall one with Para Sakti be;
And reach the Mukti State Finale,
She, the Grace Divine
All Liberation confers.
Tamil Meaning:
`முத்திக்கு மூலம்` என்றும், எல்லாவற்றிற்கும் மேலான பொருள்` என்றும் சொல்லப்படுகின்ற அருட்சத்தி, சிவ புண்ணிய மிகுதியால் தனக்குக் கிடைக்க அவளோடு கூடி நின்றவன். அதன் பயனாக மாயா காரியங்கள் பலவும் தன்னை அணுகமாட்டாது நீங்க, இதுகாறும் மாயையின் மகனாய் நின்ற நிலைநீங்கி, அவ்வருட் சத்தியின் மகனாகின்ற பேற்றைப் பெற்று விளங்குவான்.Special Remark:
உம்மைகள், சிறப்பு. ``பராசத்தி`` என்பது சுட்டுப் பெயரளவாய் நின்றது, ``நேர்பட`` என்பதை ஈற்றடியின் பின் வைத்து, ``முத்திக்கு மூலமதாம் எனும் ... ... தற்பரத்தாள் நேர்பட, பராசத்தி தன்னொடு கூடி மேலணுகா ... ... விட்டிடப் பாலனும் ஆகும்`` எனக் கூட்டி உரைக்க.இதனால், அருட் சத்தியைச் சார்ந்தவழி மாயை அணுக மாட்டாமை கூறி, அவளை அடைந்தவர் துன்புறாதிருத்தற்குக் காரணம் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage