
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி
பதிகங்கள்

தாமேல் உறைவிடம் ஆறித ழானது
பார்மேல் இதழ்பதி னெட்டிரு நூறுள
பூமேல் உறைகின்ற புண்ணியை வந்தனள்
பார்மேல் உறைகின்ற பைந்தொடி யாளே.
English Meaning:
She is on the Flower of Cosmos and Flower of HeartOn the petals of the six Adharas is She seated;
On the petals of the Flower of Cosmos,
Of Worlds two hundred and eighteen above is She seated;
She is the Blessed One that is seated on the Flower of Heart
She is the bejewelled one that is on Earth below.
Tamil Meaning:
மேற் கூறிய சாதகர் உலகரின் மேம்பட்டுத் தங்கு கின்ற இடம் ஆறு. அவற்றுள் ஒவ்வொன்றும் தாமரைகளாய் விளங்கும். அவர்கட்குப் பிருதிவி `முதலாக மேல்நோக்கி எண்ணு கின்ற தத்துவம் முப்பத்தாறினையும் இதழ்களாகக் கொண்ட மாயை யாகிய தாமரையிலும், உண்மையாகவே நூறிதழ் உள்ள தாமரையிலும் உள்ளவளாய்க் காட்சியளிக்கின்ற அச்சத்தி, உலகர் பொருட்டுப் பூமியில் தேவியாயும் விளங்குகின்றாள்.Special Remark:
முதற்கண் உள்ள இதழ், சினையாகுபெயர். ஆறு தாமரைகளாகிய இடம் ஆறு ஆதாரங்கள். `இரு பதினெட்டு` என மாறிக் கூட்டுக. `இதழ் இருபதினெட்டு உள பூ, நூறுள பூ` எனத் தனி இயைக்க. வழிபாட்டிற்குச் சிறந்த ஆசனம் தாமரை மலரும், அதனுட் சிறப்புடையது நூறிதழ் உடையதும் ஆதலின், தேவியை அதன்மேற் கண்டு அன்பர்கள் வழிபடுதல் மரபு. ``பார்`` இரண்டில் முன்னது பிருதிவி தத்துவம்; பின்னது பூவுலகம். `பைந்தொடியாளாய் வந்தனள்` என மேலே கூட்டுக. இதனுள்ளும் ஆசெதுகை வந்தது. `புண்ணியம்` என்பது பாடமாயின், அதனை ஆகுபெயராகக் கொள்க.இதனால், ஆறாதாரங்களின்வழி அகநோக்கிற் செல்ல மாட்டாத உலகர் பொருட்டு அச்சத்தியே திருக்கோயில்களில் உருக்கொண்டு எழுந்தருளியிருத்தல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage