
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி
பதிகங்கள்

என் அம்மை என் அப்பன் என்னும் செருக்கற்று
உன் அம்மை ஊழித் தலைவன் அங்குளன்
மன் அம்மை யாகி மருவி உரைசெய்யும்
பின் அம்மை யாய்நின்ற பேர்நந்தி தானே.
English Meaning:
Siva and Sakti are the Real Father and MotherCease talking of ``my mother``, ``my father``
In The possessive way of this world;
Your Mother and the timeless Father
Are there in union;
As your unerring guide for you Here-after;
Nandi verily stood,
As Mother and Father in one.
Tamil Meaning:
உடல்வழிப்பட்டு, `என் தாய், என் தந்தை` எனக் கூறி உலகியலில் மயங்குகின்ற மயக்கத்தை விடுத்து நினைத்தவழி, உண்மைத் தாயாய் ஊழிக் காலத்தும் அழியாத உயிர்த் தலைவன் அவ் விடத்தே உளனாவன். இனி, `அத் தலைவனாவான் யாவன்` எனின், முதலிலே திரோதான சத்தியாய்ப் பொருந்தி, உண்மையை மறைத்து நின்று, பின் அருட் சத்தியாகிய உண்மையை விளக்குகின்ற சிவனேயாம்.Special Remark:
உம்மை, சிறப்பு. உரை செய்தல் - உபதேசித்தல், உண்மை ஞானத்தை விளக்குதல். ``உரை செய்யும்`` எனவும், ``பின்`` எனவும் பின்னர் வருகின்றமையால் முன்னர் அவற்றின் மறுதலைகள் கொள்ளப் பட்டன. `பின் உரைசெய்யும் அம்மையாய் நின்ற நந்தி` என இயைக்க. ``பேர் நந்தி`` என்பது அடையடுத்த சொல்லாகுபெயர். சிவனே சத்தியாதலன்றி வேறின்மை இங்குத் தோன்றும்படி இவ்வாறு ஓதினார்.இதனால், திரோதான சத்தி அருட் சத்திகளும், ஆதி சிவன், அநாதிசிவன் இவர்களுமே உலகிற்கு உண்மைத் தாயும் தந்தையும் ஆதல் கூறப்பட்டது. ``அம்மையப்பரே உலகுக்கம்மையப்பர்`` என்பது திருக்களிற்றுப்படியார்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage