
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி
பதிகங்கள்

இருந்தனள் தன்முகம் ஆறொடு நாலாய்
பரந்தன வாயு திசைதிசை தோறும்
குவிந்தன முத்தின் முகம்ஒளி நோக்கி
நடந்தது தேறல் அதோமுகம் அம்பே.
English Meaning:
As Prana Reaches Sakti in Ajna Ambrosia FlowsThe She was with faces ten in all directions
Because of Her the wind blows in all quarters,
The fire flames upwards and water courses downwards
And everything functions properly because of Her.
Tamil Meaning:
சத்தி பத்துத்திருமுகங்களைக்கொண்டு பத்துத் திசைகளையும் நோக்கியிருக்கின்றாள். அதனாலே, காற்று எங்கும் சென்று அசைதலும், நெருப்பு மேல்நோக்கி எரிதலும், நீர் கீழ்நோக்கிப் பாய்தலும் உடையனவாய்த் தம்தம் செயலைச்செய்கின்றன.Special Remark:
``திசை திசைதோறும்`` என்றமையால் பத்துத் திசையையும் நோக்குதற் பொருட்டுப் பத்து திருமுகங்களையுடைய ளாயினமை பெறப்பட்டது. சிறப்புடைய மூன்றனை எடுத்துக்கூறிப் பிறபிற பொருள்களும் சத்தியின் பார்வையாலே செயற்பட்டு நிற்றலைக் கொள்ளவைத்தார். வாயு ஒன்றேயாயினும் திசைநோக்குப் பற்றிப் பலவாக வழங்கப்படுதல் நோக்கிப் பன்மையாகக் கூறினார். ``ஒளி`` என்றது சுடரை. தீயின் சுடர்கள் பலவாதல் வெளிப்படை. ``முத்து`` என்றது நகைப்பினை. `ஒளிமுத்தின் முகம் நோக்கிக் குவிந்தன` எனக் கூட்டுக. குவிதல், மேல்நோக்கி எழுதல். தேறல் - தேன். `அம்பு தேறல்போல அதோமுகம் நடந்தது` என்க. தேன் போறல், இனிமையை உண்டாக்கல். இதனுள் பின்னிரண்டடிகள் மூன்றாம் எழுத்தெதுகை.இதனால், பொருள்தன்மை பலவும் சத்தியது அருள் நோக்காலே நிலைபெறுதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage