
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி
பதிகங்கள்

பைந்தொடி யாளும் பரமன் இருந்திடத்
திண்கொடி யாகித் திகழ்தரு சோதியாம்
விண்கொடி யாகி விளங்கி வருதலால்
பெண்கொடி யாக நடந்த துலகே.
English Meaning:
Worlds Move in Sakti`s WayThe bejewelled one is where Parama is;
She is the Light that shines high
As pennon resplendent,
She is dazzling like the lightning in the sky,
And all worlds in Sakti`s Way whirl.
Tamil Meaning:
சிவன் யாதொன்றையும் நினையாது வாளா இருக்கும் பொழுது, சத்தியும் அசைதல் இல்லாத கொடிபோல ஞானமாத்திரையாய் நிற்பாள். சிவன் மேகத்தில் உண்டாகின்ற மின்னலைப்போல உலகை நோக்கித் தெய்வ நாயகனாய் வருதலினால், சத்தி தெய்வநாயகியாய் அவனுக்குத் துணை நிற்கின்றாள். அதனாலே உலகம் நடைபெற்று வருகின்றது.Special Remark:
``பரமன் இருந்திட`` என்பதை முதற்கண் வைத்து உரைக்க. `திண்கொடி` இல்பொருள் உவமை. ``ஆக`` இரண்டில் முன்னது உவம உருபு., ``பெண்கொடியாக`` என்ற அனுவாதத்தால், பெண்கொடியாதலும் பெறப்பட்டது. `பரமன், பைந்தொடியாள்` என்பன பின்னும் சென்று இயைந்தன.இதனால், சத்தி சிவங்களது சொரூப தடத்த நிலைகள் கூறப்பட்டன. சொரூபம் அநாதி; பரம். தடத்தம் ஆதி; அபரம்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage