
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி
பதிகங்கள்

ஆறி யிருந்த அமுத பயோதரி
மாறி யிருந்த வழிஅறி வார்இல்லை
தேறி யிருந்துநல் தீபத் தொளியுடன்
ஊறி யிருந்தனள் உள்ளுடை யார்க்கே.
English Meaning:
Sakti is in Siva and in JivaShe is in Siva contained,
She is of ambrosial milk breasted,
She is in Jivas,
Yet they know not the way to Her;
Into them that hold Her in their hearts,
She welled up from within
And like a bright lamp shed Her light.
Tamil Meaning:
தோன்றாது அடங்கியிருந்த, ஞான உருவின ளாகிய அருட் சத்தி, அந்நிலைமாறி வெளிப்பட்டுநின்ற நிலையை அறிபவர் உலகருள் ஒருவரும் இல்லை, ஆயினும் புற நோக்கத்தை விடுத்து அக நோக்கத்தைக் கொண்டுள்ளவர்களுக்கு அவள் வெளிப் பட்டு, அவர்களைத் தன் அடியார்களாக ஏற்றுக்கொண்டு ஞான ஒளியின்வழிப் பேரின்பப் பெருக்காய்ச் சுரந்து நிற்கின்றாள்.Special Remark:
அமுத பயம் - அமிர்தமாய் (ஆணவத்தைப் போக்கு கின்ற மருந்தாய்) உள்ள பால். `அதனைக் கொண்ட தனங்களை யுடையவள்` என்க. அருட்சத்தியாதல் தெளிவு. தேறுதல் - தெளிதல்; ஏற்றுக்கொள்ளுதல். `சத்தி ஆறியிருத்தல், சிவத்தில் அடங்கித் திருவைந்தெழுத்தில் சிகாரத்தின் பின்னிற்றல்` எனவும், `மாறி இருத்தல், சிகாரம் பின்னாகத் தான் முன்னே நின்று `வசி` என்பதாக நிற்றல்` எனவும், `அவ்வாறு மாறிநிற்கும் வழியை அறிவார் இல்லை` எனவும் முதலிரண்டடிகட்குக் குறிப்புப் பொருள் கொள்வாரும் உளர். அக நோக்காவது அருட்கண்.இதனால், அருட்கண்ணைப்பெறும் பக்குவம் உடையார்க்கே அருட்சத்தி பயன் தருதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage