
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி
பதிகங்கள்

இன்பக் கலவியில் இட்டெழு கின்றதோர்
அன்பிற் புகவல்ல னாம் எங்கள் அப்பனும்
துன்பக் குழம்பில் துயருறும் பாசத்துள்
என்பிற் பராசத்தி என்னம்மை தானே.
English Meaning:
How UnitedIn the rapture of that union
My Father enters in love subtle;
In Misery`s broth of harassing Pasa,
My Mother Para Sakti
To the very marrow enters.
Tamil Meaning:
எங்கள் தந்தையாகிய சிவன் ஆணும், பெண்ணு மாய உயிர்களைக் காமக் கூட்டத்தில் செலுத்தி, அதுகாரணமாக எழுகின்ற அன்பினையே வாயிலாகக்கொண்டு அவ்வுயிர்களின் உள்ளத்தில் புகுந்து நலம்செய்யும் தன்மையை உடையவன். என் தாயாகிய சத்தி, உயிர்கள் துன்ப மயமாகிய கருப்பைக் குழம்பில் அகப் பட்டுத் துன்புறுகின்ற அவ்வுடம்பில் தானே அவற்றின் சுழுமுனை நாடியிற் பொருந்தி நலம் புரிகின்றவளாவள்.Special Remark:
``பாசம்`` என்றது, இங்கு உடம்பினை, என்பு முதுகந் தண்டு. அஃது அதன்கண் உள்ள சுழுமுனை நாடியைக் குறித்தது. அப்பனுக்குக் கூறிய புகல் வன்மை, அம்மைக்கும் ``என்பில்`` என்பதன்பின் வந்து இயைந்தது.இதனால், சத்தி பெத்த நிலையிலும் முதற்றொட்டு உயிர் களைப் புரந்து வருதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage