
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி
பதிகங்கள்

அடுக்கின்ற தாமரை ஆதி இருப்பிடம்
எடுக்கின்ற தாமரை இல்லகத் துள்ளது
மடுக்கின்ற தாமரை மத்தகத் தேசெல
முடுக்கின்ற தாமரை முற்சது ரத்ததே.
English Meaning:
Lotuses of SaktiThat Lotus in folds several is Primal Sakti`s abode;
The Lotus that lifts soul is in the heart;
When the Lotus in Muladhara is roused,
The Lotus in Sahasrara blossoms.
Tamil Meaning:
பிராணன் எளிதில் சென்று பொருந்துகின்ற ஆஞ்ஞா சக்கரத்தில் உள்ள தாமரையே ஆதிசத்தி நின்று உயிர்களுக்கு அறிவிக்கின்ற இடமாகும். ஆன்மாவைக் கீழே செல்லாது தியானம் முதலியவற்றால் மேலெழச் செய்கின்ற ஆசனமாகிய தாமரை மலர் உடலின் நடுவிடத்தில் உள்ளது. (அனாகதம் - இருதயம் என்றவாறு.) வழிபடுவோன் சந்திரனது அமுதத்தைப் பருகும் இடமாகிய ஆயிர இதழ்த் தாமரை மலர் உள்ள தலையிலே உயிருணர்வு செல்லும்படி ஓட்டுகின்ற தாமரை மலர், மேற்சொல்லிய அனைத்திற்கும் முதலிலே நாற்கோண நிலையினதாய் உள்ளது. (மூலாதாரத்திலே உள்ளது என்பதாம்.)Special Remark:
`அம்முறையறிந்து சத்தியை அங்கெல்லாம் வழிபடுக` என்பது குறிப்பெச்சம். `அடுக்கும்` என்பது முதலாகவும், `முச்சதுரத்து` எனவும் ஓதுவன பாடம் ஆகாமையறிக.இதனால், `சத்தியை யோக முறையில் வழிபடுதல் மிக்க பயனைத் தரும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage