
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி
பதிகங்கள்

புனையவல் லாள்புவ னத்திறை எங்கள்
வனையவல் லாள்அண்ட கோடிகள் உள்ளே
புனையவல் லாள்புவ னத்தொளி தன்னை
புனையவல் லாளையே போற்றியென் பேனே.
English Meaning:
Sakti`s OmnipotenceShe holds in Her Form
The One Lord of Worlds all,
She creates million, million universes vast
In Her Thought;
She is draped in Cosmic Light;
She beautifies all,
Her I stood adoring.
Tamil Meaning:
உலகத் தலைவனாகிய சிவனையும், உயிர்களாகிய எங்களையும் தாங்க வல்லவள்; உலகங்கள் அனைத்தையும் ஆக்க வல்லவள்; அவைகளைத் தனக்குள்ளே அடக்கிக் காக்க வல்லவள்; உலகத்து ஒளிகள் அனைத்தையும் தனது திருமேனியின் ஒளியாகச் செய்ய வல்லவள்; அத்தகைய பேராற்றல் உடையவளாகிய பூரண சத்தியையே நான் துதிக்கின்றேன்.Special Remark:
முதற்கண் உள்ள புனைதல் - தரித்தல். ``இறை`` என்பதில் இரண்டனுருபு இறுதிக்கண் தொக்கது. ``எங்கள்`` என்பதில் இரண்டனுருபு தொகுக்கப்பட்டது. சத்தி இறைவனைத் தாங்குதல் ஆவது, உற்ற துணையாய் இருத்தல். ``மண்டலம்`` என்பது `அண்டம்` என்னும் பொருளதாய் நின்றது. `அப்புனைய வல்லாளையே` எனச் சுட்டு வருவிக்க.இதனால், பூரண சத்தியது ஆற்றலின் பெருமை வகுத்துரைத்து, `சத்தி` எனப்படுவாள் அவளேயாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage