
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி
பதிகங்கள்

தானே எழுந்தஇத் தத்துவ நாயகி
வானேர் எழுந்து மதியை விளக்கினள்
தேனேர் எழுகின்ற தீபத் தொளியுடன்
மானே நடமுடை மன்றறி யீரே.
English Meaning:
She Illumines the Moon WithinOf Herself She arose
This Mistress of Tattvas,
And illumined the Moon
In the astral sphere within;
Like a column of treacle
The light of Kundalini bright rises,
Know you, where that Siva the Fawn dances!
Tamil Meaning:
உயிர்களின் முயற்சியாலன்றித்தானே விளங்கி நின்றவளாகிய அருட்சத்தி, இன்ப மழையைப் பொழிகின்ற மேகமாய் நின்று, ஞானத்தை விளங்கச்செய்தாள். இனி, இனிமையைத் தருவ தாகிய தேன்போல விளங்கிய அந்த ஞான ஒளியுடனே கூத்தப் பெருமான் செய்கின்ற ஆனந்த நடனத்தைக் கண்டு இன்புற வேண்டுவதுதான் உங்கட்குக் கடமை.Special Remark:
தத்துவம் - மெய்ப் பொருள். `போல` என்பது `போல்` என வருதல்போல, `நேரே` என்பது இரண்டிடத்தும், `நேர்` என வந்தது. ``மானே`` என்னும் பிரிநிலை ஏகாரம் `ஞான நடம் புரிகின்ற பெருமான்` என்பது உணர்த்தி நின்றது. ``நடம் உடை மன்று`` என்பதை, `மன்று உடை நடம்` என மாற்றிக்கொள்க. இஃது அருள் பெற்றுநின்ற ஞானியரை நோக்கிக் கூறியவாறாக அருளிச் செய்யப் பட்டது.இதனால், அருட் சத்தி பக்குவ நிலையில்தானே தோன்று தலும், அத் தோற்றத்தின் பயன் முறையே அறிவும், ஆனந்தமும் ஆதலும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage