
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி
பதிகங்கள்

அறிவான மாயையும் ஐம்புலக் கூட்டத்
தறிவான மங்கை அருளது சேரின்
பிறியா அறிவறி வாருளம் பேணும்
நெறியாய சித்தம் நினைந்திருந் தாளே.
English Meaning:
When Grace Dawns Jnana ArisesIn the five senses of Mayaic knowledge,
When Grace of Sakti of True Knowledge enters,
They know the Jnana
That forever abides;
In the thoughts of those
Who intense cherish Her,
She abides for sure.
Tamil Meaning:
அருள்வழி நிற்கும் அறிவேயன்றி, மாயா கருவிகளின் வழி நிற்கும் அறிவும்தான் ஐம்புலன்களை நுகர்கின்ற பொழுது அறிவே வடிவான அருட் சத்தியோடு கூடியிருக்கப் பெறு மாயின், உயிர்க்குயிராய் உள்ள சிவத்தையே நினைக்கின்றவருடைய உள்ளத்தையே விரும்பியிருக்கும் தனது முறைமையை அவர்கள் இடத்தும் அருட்சத்தி கொண்டிருப்பாள்.Special Remark:
அஃதாவது, `அவர்கள் உள்ளத்திலும் விரும்பியிருந்து, அவர்கள் செயலெல்லாம் தன் செயலாகச் செய்வள்` என்பதாம். `மாயையேயான அறிவு` எனற்பாலதனை, ``அறிவான மாயை`` என ஓதினார். உம்மை, இறந்தது தழுவிய எச்சம். கூட்டம் - கூடி நுகர்தல். ``கூட்டத்துச் சேரின்` என இயையும். ``சித்தம்`` என்பது அதன்கண் கொள்ளப்படும் பொருளை உணர்த்திற்று. ``சேரின்`` என்பதன்பின், `அவள்` என்பது வருவிக்க.இதனால், அருட்சத்தி ஞானிகட்கு உலகியலால் பழுதுண்து ஆகாதவாறு காத்தல் கூறப்பட்டது. இந்நிலையே, ``பெற்ற சிற்றின்பமே பேரின்பமாம்`` 1 நிலை என்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage