
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி
பதிகங்கள்

கும்பக் களிறைந்தும் கோலொடு பாகனும்
வம்பில் திகழும் மணிமுடி வள்ளலும்
இன்பக் கலவி இனிதுறை தையலும்
இன்பக் கலவியுள் இன்பமுற் றாரே.
English Meaning:
Indriya, Jiva, Siva and Sakti — All UnitedThe massive elephants five (Indriyas)
Jiva, the mahout with the goad
The Lord of many splendoured crown (Siva)
Who in the fragrant (Blossom) appears, (Sanasrara)
And the Mother who with Him is in rapturous union,
All in one love-union for ever merged.
Tamil Meaning:
மத்தகத்தை யுடைய களிற்றியானைகளாகிய ஐந்து புலன்களும், அவற்றை மனமாகிய கோலால் செலுத்துகின்ற பாகனாகிய உயிரும், அவ்யானைகட்கும், பாகனுக்கும் தலைவனும், அரசனாகிய சிவனும், அச்சிவனோடு இன்பக் கலவி செய்து இனிதே உறையும் அரசியாகிய சத்தியும் இனிதாகிய கூட்டத்தில் இன்ப முற்றிருக்கின்றனர்.Special Remark:
என்று, `மாயா காரியமாகிய கருவி கரணங்களுள், அவற்றைக் கொண்டு செயலில் ஈடுபடுகின்ற ஆன்மாவும், சிவனும், சத்தியும் ஒருங்குகூடி நிற்றலாலே உலகியல் நடைபெறுகின்றது` என்ற வாறு. இங்ஙனங் கூறினும், சத்தியது இன்றியமையாமையே இங்குக் கருதப்பட்டது என்க. ஐம்புலன்களே உலகியலாம். ஐம்புல அவா வையே `யானை` என்றல் மரபாயினும், அவ் அவாவினோடு காரண காரியத் தொடர்ச்சிகளை யுடையனவாதல் பற்றி இங்கு அப்புலன் களையே ``களிறு`` என்றார். வம்பு - வாசனை. அஃது அதனையுடைய மாலையை உணர்த்திற்று. இன்பக் கலவி`` இரண்டில் முன்னது காமக் கூட்டம் ; பின்னது இனிய நட்பு, நட்டாரை, ``கலந்தார்`` என்றல் வழக்காதைல,``கலந்தாரைக் கைவிடு தல் கானக நாட,
விலங்கிற்கும் விள்ள லரிது`` (நாலடி - 76.)
என்பது முதலியவற்றால் அறிக. ஈற்றடியை, `அன்பிற் கலவியுளா யொழிந்தாரே` என ஓதுதல் பாடமாகாமை, அந்தாதிக்கு ஒவ்வாமை யான் அறிக. இதனுள் இனவெதுகை வந்தது.
இதனால், மெய்ந்நெறியே யன்றி உலகியலும் சத்தியின்றி அமையாமை கூறப்பட்டது. இந்நிலையில் சத்தி, `திரோதாயி` எனப் படுவாள் என்பது பலவிடத்தும் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage