ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Paadal

  • 1. நவாக்கரி சக்கரம் நான்உரை செய்யின்
    நவாக்கரி ஒன்று நவாக் கரியாக
    நவாக்கரி எண்பத் தொருவகை யாக
    நவாக்கரி அக்கிலீம் சௌம்முதல் ஈறே.
  • 10. அறிந்திடு வார்கள் அமரர்க ளாகத்
    தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன்
    பரிந்திடு வானவன் பாய்புனல் சூடி
    முரிந்திடு வாளை முயன்றிடும் நீரே.
  • 100. ஆனை மயக்கும் அறுபத்து நால்தறி
    ஆனை யிருக்கும் அறுபத்து நால்ஒளி
    ஆனை யிருக்கும் அறுபத்து நால்அறை
    ஆனையும் கோடும் அறுபத்து நாலிலே.
  • 11. நீர்பணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள்
    பாரணி யும்இரீம் உன்சிரீம் ஈறாம்
    தாரணி யும்புகழ்த் தையல்நல் லாளைக்
    காரணி யும்பொழில் கண்டுகொள் வீரே.
  • 12. கண்டுகொள் ளும்தனி நாயகி தன்னையும்
    மொண்டுகொள் ளும்முக வச்சியம தாயிடும்
    பண்டுகொ ளும்பர மாய பரஞ்சுடர்
    நின்றுகொ ளும்நிலை பேறுடை யாளையே.
  • 13. பேறுடை யாள்தன் பெருமையை எண்ணிடில்
    நாடுடை யார்களும் நம்வச மாகுவர்
    மாறுடை யார்களும் வாழ்வது தான்இலை
    கூறுடை யாளையும் கூறுமின் நீரே.
  • 14. கூறுமின் எட்டுத் திசைக்கும் தலைவியை
    ஆறுமின் அண்டத் தமரர்கள் வாழ்வெனல்
    மாறுமின் வையம் வரும்வழி தன்னையும்
    தேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே.
  • 15. சேவடி சேர்ந்து செறிய இருந்தவர்
    நாவடி யுள்ளே நவின்றுநின் றேத்துவர்
    பூவடி இட்டுப் பொலிய இருந்தவர்
    மாவடி காணும் வகையறி வாரே.
  • 16. ஐம்முத லாக அமர்ந்தெழு சக்கரம்
    ஐம்முத லாக அமர்ந்திரீம் ஈறாகும்
    ஐம்முத லாகி யவற்றுடை யாளை
    மைம்முத லாக வழுத்திடு நீயே.
  • 17. வழுத்திடும் நாவுக் கரசிவள் தன்னைப்
    பகுத்திடும் வேதம்மெய் யாகமம் எல்லாம்
    தொகுத்தொரு நாவிடை சொல்லவல் லாளை
    முகத்துளும் முன்னெழக் கண்டுகொ ளீரே.
  • 18. கண்டஇச் சக்கரம் நாவில் எழுதிடில்
    கொண்டஇம் மந்திரம் கூத்தன் குறியதாம்
    மன்றினுள் வித்தையும் மானுடர் கையதா
    வென்றிடும் வையகம் மெல்லியல் மேவியே.
  • 19. மெல்லிய லாகிய மெய்ப்பொரு ளாள்தனைச்
    சொல்லிய லாலே தொடர்ந்தங் கிருந்திடும்
    பல்லிய லாகப் பரந்தெழு நாள்பல
    நல்லிய லாக நடந்திடுந் தானே.
  • 2. சௌம்முதல் அவ்வொடும் ஔவுடன் ஆம்கிரீம்
    கௌவுமும் ஐமும் கலந்திரீம் சிரீம்என்
    றொவ்வில் எழும்கிலீம் மந்திர பாதமாச்
    செவ்வுள் எழுந்து சிவாயநம என்னவே.
  • 20. நடந்திடும் நாவினுள் நன்மைகள் எல்லாம்
    தொடர்ந்திடும் சொல்லொடு சொற்பொருள்கள் [தானும்
    கடந்திடும் கல்விக் கரசிவளாகப்
    படர்ந்திடும் பாரில் பகையில்லை தானே.
  • 21. பகையில்லை கௌம்முதல் ஐம் அது ஈறாம்
    நகையில்லை சக்கரம் நன்றறி வார்க்கு
    மிகையில்லை சொல்லிய பல்லுரு வெல்லாம்
    வகையில்லை யாக வணங்கிடுந் தானே.
  • 22. வணங்கிடும் தத்துவ நாயகி தன்னை
    நலங்கிடும் நல்லுயி ரானவை யெல்லாம்
    கலங்கிடும் காம வெகுளி மயக்கம்
    துளங்கிடும் சொல்லிய சூழ்வினை தானே.
  • 23. தானே கழறித் தணியவும் வல்லனாய்த்
    தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த்
    தானே தனிநடங் கண்டவள் தன்னையும்
    தானே வணங்கித் தலைவனு மாமே.
  • 24. ஆமே அனைத்துயிர் ஆகிய அம்மையும்
    தாமேசகலமும் ஈன்றஅத் தையலும்
    ஆமே அவளடி போற்றி வணங்கிடில்
    போமே வினைகளும் புண்ணிய னாகுமே.
  • 25. புண்ணிய னாகிப் பொருந்தி உலகெங்கும்
    கண்ணிய னாகிக் கலந்தங் கிருந்திடும்
    தண்ணிய னாகித் தரணி முழுதுக்கும்
    அண்ணிய னாகி அமர்ந்திருந் தானே.
  • 26. தானது கம்இரீம் கௌமது ஈறாம்
    நானது சக்கரம் நன்றறி வார்க்கெலாம்
    கானது கன்னி கலந்த பராசத்திக்
    கேனது! வையம் கிளரொளி யானதே.
  • 27. ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரின்
    களிக்கும் இச் சிந்தையிற் காரணங் காட்டித்
    தெளிக்கும் மழையுடன் செல்வம்உண் டாக்கும்
    அளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே.
  • 28. அறிந்திடுஞ் சக்கர அற்சனை யோடே
    எறிந்திடும் வையத் திடரவை காணின்
    மறிந்திடும் மன்னனும் வந்தனை செய்வான்
    பொறிந்திடும் சிந்தை புகையில்லை தானே.
  • 29. புகையில்லை சொல்லிய பொன்னொளி உண்டாம்
    குகையில்லை கொல்வ திலாமையி னாலே
    வகையில்லை வாழ்கின்ற மன்னுயிர்க் கெல்லாம்
    சிகையில்லைச் சக்கரஞ் சேர்ந்தவர்க் காமே.
  • 3. நவாக் கரியாவதும் நானறி வித்தை
    நவாக் கரியுள்எழும் நன்மைகள் எல்லாம்
    நவாக் கரிமந்திரம் நாவுளே ஓத
    நவாக் கரிசத்தி நலந்தருந் தானே.
  • 30. சேர்ந்தவர் என்றும் திசையொளி யானவர்
    காய்ந்தெழும் மேல்வினை காணகி லாதவர்
    பாய்ந்தெழும் உள்ளொளி பாரிற் பரந்தது
    மாய்ந்தது காரிருள் மாறொளி தானே.
  • 31. ஒளியது ஹௌம்முன் கிரீமது ஈறாம்
    களியது சக்கரம் கண்டறி வார்க்குத்
    தெளியது ஞானமும் சிந்தையும் தேறப்
    பளியது பஞ்சாக் கரமது வாமே.
  • 32. ஆமே சதாசிவ நாயகி யானவள்
    ஆமே அதோமுகத் துள்அறி வானவள்
    ஆமே சுவைஒளி ஊறோசை கண்டவள்
    ஆமே அனைத்துயிர் தன்னுள்ளும் ஆமே.
  • 33. தன்னுளு மாகித் தரணி முழுதுங்கொண்
    டென்னுளு மாகி இடம்பெற நின்றவள்
    மண்ணுளும் நீரனல் காலுளும் வானுளும்
    கண்ணுளும் மெய்யுளும் காணலு மாமே.
  • 34. காணலு மாகும் கலந்துயிர் செய்வன
    காணலு மாகும் கருத்துள் இருந்திடில்
    காணலு மாகும் கலந்து வழிசெயல்
    காணலு மாகும் கருத்துற நில்லே.
  • 35. நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாகக்
    கண்டிடும் உள்ளம் கலந்தெங்கும் தானாகக்
    கொண்டிடும் வையம் குணம்பல தன்னையும்
    விண்டிடும் வல்வினை மெய்ப்பொரு ளாகுமே.
  • 36. மெய்ப்பொருள் (ஔம்)முதல் (ஹௌம)து ஈறாக்
    கைப்பொரு ளாகக் கலந்தெழு சக்கரம்
    தற்பொரு ளாகச் சமைந்தமு தேச்சரி
    நற்பொரு ளாக நடுவிருந் தாளே.
  • 37. தாளதி னுள்ளே சமைந்தமு தேசுவரி
    காலது கொண்டு கலந்துற வீசிடில்
    நாளது நாளும் புதுமைகள் கண்டபின்
    கேளது காயமும் கேடில்லை காணுமே.
  • 38. கேடில்லை காணும் கிளரொளி கண்டபின்
    நாடில்லை காணும் அந் நாள்முதல் அற்றபின்
    மாடில்லை காணும் வரும்வழி கண்டபின்
    காடில்லை காணும் கருத்துற் றிடத்துக்கே.
  • 39. உற்றிட மெல்லாந் உலப்பிலி பாழாகிக்
    கற்றிடமெல்லாம் கடுவெளி யானது
    மற்றிட மில்லை வழியில்லை தானில்லை
    சற்றிட மில்லை சலிப்பற நின்றிடே.
  • 4. நலந்தரு ஞானமும் கல்வியும் எல்லாம்
    உரந்தரு வல்வினை உம்மைவிட் டோடிச்
    சிரந்தரு தீவினை செய்வ தகற்றி
    வரந்தரு சோதியும் வாய்த்திடுங் காணே.
  • 40. நின்றிடும் ஏழ்கடல் ஏழ்புவி எல்லாம்
    நின்றிடும் உள்ளம் நினைத்தவை தானொக்கும்
    நின்றிடும் சத்தி நிலைபெறக் கண்டிட
    நின்றிடும் மேலை விளக்கொளி தானே.
  • 41. விளக்கொளி (ஸௌம்)முதல் (ஔம)து ஈறா
    விளக்கொளிச் சக்கரம் மெய்ப்பொரு ளாகும்
    விளக்கொளி யாகிய மின்கொடி யாளை
    விளக்கொளி யாக விளங்கிடு நீயே.
  • 42. விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின்
    விளங்கிடு மெல்லிய லானது வாகும்
    விளங்கிடு மெய்நின்ற ஞானப்பொருளை
    விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே.
  • 43. தானே வெளியென எங்கும் நிறைந்தவள்
    தானே பரம வெளியது வானவள்
    தானே சகலமும் ஆக்கி அழித்தவள்
    தானே அனைத்துள அண்ட சகளமே.
  • 44. அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
    பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
    குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
    கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே.
  • 45. கலப்பறி யார் கடல் சூழுல கெல்லாம்
    உலப்பறி யார் உட லோடுயிர் தன்னைச்
    சிலப்பறி யார் சில தேவரை நாடித்
    தலைப்பறி யாகச் சமைந்தவர் தானே.
  • 46. தானே எழுந்தஅச் சக்கரம் சொல்லிடின்
    மானே மதிவரை பத்திட்டு வைத்தபின்
    தேனே இரேகை திகைப்பற ஒன்பதில்
    தானே கலந்த வரைஎண்பத் தொன்றுமே.
  • 47. ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில்
    வென்றிகொள் மேனி மதிவட்டம் பொன்மையாம்
    கன்றிய ரேகை கலந்திடும் செம்மையில்
    என்றியல் அம்மை எழுத்தவை பச்சையே.
  • 48. ஏய்ந்த மரவுரி தன்னில் எழுதிய
    வாய்ந்தஇப் பெண்எண்பத் தொன்றில் நிரைத்தபின்
    காய்ந்தவி நெய்யுட் கலந்துடன் ஓமமும்
    ஆய்ந்தவி ஆயிரம் ஆகுதி பண்ணுமே.
  • 49. பண்ணிஅப் பெண்ணைப் பரப்பற நீபிடி
    எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும்
    நண்ணிய நாமும் நான்முகன் ஒத்தபின்
    துண்ணென மேயநற் சொக்கனு மாமே.
  • 5. கண்டிடும் சக்கரம் வெள்ளிபொன் செம்பிடை
    கொண்டிடும் உள்ளே குறித்த வினைகளை
    வென்றிடும் மண்டலம் வெற்றி தருவிக்கும்
    நின்றிடும் சக்கரம் நினைக்கு மளவே.
  • 50. ஆகின்ற சந்தனம் குங்குமம் கத்தூரி
    போகின்ற சாந்து சவாது புழுகுநெய்
    ஆகின்ற கப்பூரம் ஆகோ சனம்நீரும்
    சேர்கின்ற ஒன்பதும் சேரநீ வைத்திடே.
  • 51. வைத்திடும் பொன்னுடன் மாதவம் நோக்கிடின்
    கைச்சிறு கொங்கை கலந்தெழு கன்னியைத்
    தச்சிது வாகச் சமைந்தஇம் மந்திரம்
    அர்ச்சனை ஆயிரம் ஆயிரம் சிந்தியே.
  • 52. சிந்தையி னுள்ளே திகழ்தரு சோதியாய்
    எந்தாய் கரங்கள் இருமூன்றும் உள்ளன
    பந்தமா சூலம் படைபாசம் வில்அம்பு
    முந்தை (கீலீம்)எழ முன்னிருந் தாளே.
  • 53. இருந்தனர் சத்திகள் அறுபத்து நால்வர்
    இருந்தனர் கன்னிகள் எண்வகை எண்மர்
    இருந்தனர் சூழ எதிர்சக் கரத்தே
    இருந்த கரம்இரு வில்லம்பு கொண்டே.
  • 54. கொண்ட கனங்குழை கோமுடி ஆடையாய்க்
    கண்டஇம் மூர்த்தம் கனல்திரு மேனியாய்ப்
    பண்டமர் சோதிப் படரித ழானவை
    உண்டங் கொருத்தி உணரவல் லாருக்கே.
  • 55. உணர்ந்திருந் துள்ளே ஒருத்தியை நோக்கிற்
    கலந்திருந் தெங்குங் கருணை பொழியும்
    மணந்தெழும் ஓசை ஒளியது காணும்
    தணந்தெழும் சக்கரம் தான்தரு வாளே.
  • 56. தருவழி யாகிய தத்துவ ஞானம்
    குருவழி யாகுங் குணங்களுள் நின்று
    கருவழி யாகுங் கணக்கை அறுத்துப்
    பெருவழி ஆக்குமப் பேரொளி தானே.
  • 57. பேரொளி யாய பெரிய பெருஞ்சுடர்
    சீரொளி யாகித் திகழ்தரு நாயகி
    காரொளி யாகிய கன்னிகை பொன்னிறம்
    பாரொளி யாகிப் பரந்துநின் றாளே.
  • 58. பரந்த கரம்இரு பங்கயம் ஏந்திக்
    குவிந்த கரம்இரு கொய்தளிர்ப் பாணி
    பரிந்தருள் கொங்கைகள் முத்தார் பவளம்
    இருந்தநல் லாடை மணிபொதிந் தன்றே.
  • 59. மணிமுடி பாதம் சிலம்பணி மங்கை
    அணிபவ ளன்றி அருளில்லை யாகும்
    தணிபவர் நெஞ்சினுள் தன்னரு ளாகிப்
    பணிபவர்க் கன்றோ பரகதி யாமே.
  • 6. நினைத்திடும் அச்சிரீம் அக்கிலீம் ஈறா
    நினைத்திடும் சக்கரம் ஆதியும் அந்தமும்
    நினைத்திடும் நெல்லொடு புல்லினை உள்ளே
    நினைத்தி (டு) அருச்சனை நேர்தரு வாளே.
  • 60. பரந்திருந் துள்ளே அறுபது சத்தி
    கரந்தனர் கன்னிகள் அப்படிச் சூழ
    மலர்ந்திரு கையின் மலரவை ஏந்தச்
    சிறந்தவர் ஏத்தும் (சிரீம்)தன மாமே.
  • 61. தனமது வாகிய தையலை நோக்கி
    மனமது ஓடி மரிக்கில்ஓ ராண்டில்
    கனமவை அற்றுக் கருதிய நெஞ்சம்
    தினகர னாரிடச் செய்திய தாமே.
  • 62. ஆகின்ற மூலத் தெழுந்த முழுமலர்
    பேர்கின்ற பேரொளி யாய மலரதாய்ப்
    போகின்ற பூரண மாக நிறைந்தபின்
    சேர்கின்ற செந்தழல் மண்டல மானதே.
  • 63. ஆகின்ற மண்டலத் துள்ளே அமர்ந்தவள்
    ஆகின்ற ஐம்பத் தறுவகை யானவள்
    ஆகின்ற ஐம்பத் தறுசத்தி நேர்தரும்
    ஆகின்ற ஐம்பத் தறுவகைச் சூழலே.
  • 64. சூழ்ந்தெழு சோதி சுடர்முடி பாதமா
    ஆங்கணி முத்தம் அழகிய மேனியும்
    தாங்கிய கையவை தார்க்கிளி ஞானமாய்
    ஏந்து கரங்கள் எடுத்தமர் பாசமே.
  • 65. பாசம தாகிய வேரை அறுத்திட்டு
    நேசம தாக நினைத்திரும் உம்முளே
    நாசம தெல்லாம் நடந்திடும் ஐயாண்டில்
    காசினி மேலமர் கண்ணுத லாக்குமே.
  • 66. கண்ணுடை நாயகி தன்னரு ளாம்வழி
    பண்ணுறு நாதம் பகையற நின்றிடில்
    விண்ணமர் சோதி விளங்க ஹிரீங்காரம்
    மண்ணுடை நாயகி மண்டல மாகுமே.
  • 67. மண்டலத் துள்ளே மலர்ந்தெழு தீபத்தைக்
    கண்டகத் துள்ளே கருதி யிருந்திடும்
    விண்டகத் துள்ளே விளங்கி வருதலால்
    தண்டகத் துள்ளவை தாங்கலு மாமே.
  • 68. தாங்கிய நாபித் தடமலர் மண்டலத்
    தோங்கி யெழுங்கலைக் குள்உணர் வானவள்
    ஏங்க வரும்பிறப் பெண்ணி யறுத்திட
    வாங்கிய நாதம் வலியுட னாகுமே.
  • 69. நாவுக்கு நாயகி நன்மணி பூண்ஆரம்
    பூவுக்கு நாயகி பொன்முடி ஆடையாம்
    பாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்தள்
    ஆவுக்கு நாயகி அன்றமர்ந் தாளே.
  • 7. நேர்தரு மந்திர நாயகி யானவள்
    யாதொரு வண்ணம்? அறிந்திடு பொற்பூவை
    கார்தரு வண்ணம் கருதின கைவரும்
    நார்தரு வண்ணம் நடந்திடு நீயே.
  • 70. அன்றிரு கையில் அளந்த பொருள்முறை
    இன்றிரு கையில் எடுத்தவெண் குண்டிகை
    மன்றது காணும் வழியது வாகவே
    கண்டங் கிருந்தவர்க் காரணி காணுமே.
  • 71. காரணி சத்திகள் ஐம்பத் திரண்டெனக்
    காரணி கன்னிகள் ஐம்பத் திருவராய்க்
    காரணி சக்கரத் துள்ளே கரந்தெங்கும்
    காரணி தன்னரு ளாகிநின் றாளே.
  • 72. நின்றஇச் சத்தி நிலைபெற நின்றிடில்
    கண்டஇவ் வன்னி கலந்திடும் ஓராண்டில்
    கொண்ட விரதம்நீர் குன்றாமல் நின்றிடில்
    மன்றினில் ஆடும் மணியது காணுமே.
  • 73. கண்டஇச் சத்தி இருதய பங்கயம்
    கொண்டஇத் தத்துவ நாயகி யானவள்
    பண்டை அவாவுப் பகையை யறுத்திட
    இன்றென் மனத்தில் இனிதிருந்தாளே.
  • 74. இருந்தஇச் சத்தி இருநாலு கையில்
    பரந்தஇப் பூக்கிளி பாசம் மழுவாள்
    கரந்திடு கேடகம் வில்லம்பு கொண்டங்
    குரந்தங் கிருந்தவள் கூத்துகந்தாளே.
  • 75. உகந்தனள் பொன்முடி முத்தார மாகப்
    பரந்த பவளமும் பட்டாடை சாத்தி
    மலர்ந்தெழு கொங்கை மணிக்கச் சணிந்து
    தழைந்தங் கிருந்தவள் தான்பச்சை யாமே.
  • 76. பச்சை இவளுக்குப் பங்கிமார் ஆறெட்டு
    கொச்சையார் எண்மர்கள் கூடி வருதலால்
    கச்சணி கொங்கைகள் கையிருங் காப்பதாய்
    எய்ச்ச இடைச்சி இனிதிருந் தாளே.
  • 77. தாளதி னுள்ளே தயங்கிய சோதியைக்
    காலது வாகக் கலந்து `கம் ஜம்` என்று
    மாலது வாக வழிபாடு செய்துநீ
    பாலது போலப் பரந்தெழு விண்ணிலே.
  • 78. விண்ணமர் நாபி இருதய மாங்கிடைக்
    கண்ணமர் கூபம் கலந்து வருதலால்
    பண்ணமர்ந் தாதித்த மண்டல மானது
    தண்ணமர் கூபம் தழைத்தது காணுமே.
  • 79. கூபத்துச் சத்தி குளிர்முகம் பத்துள
    தாபத்துச் சத்தி தயங்கி வருதலால்
    ஆபத்துக் கைகள் அடைந்தன நாலைந்து
    பாபத் தறுக்கப் பரந்தன சூலமே.
  • 8. நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம்
    கடந்திடும் காலனும் கண்ணிய நாளும்
    படர்ந்திடும் நாமமும் பாய்கதிர் போல
    அடைந்திடும் வண்ணம் அடைந்திடு நீயே.
  • 80. சூலந்தண் டொள்வாள் சுடர்பர ஞானமாம்
    வேலம்பு தமருகம் மாகிளி வில்செண்டு
    காலம்பூப் பாசம் மழுகத்தி கைக்கொண்டு
    கோலஞ்சேர் சங்கு குவிந்தகை எண்ணதே.
  • 81. எண்ணமர் சத்திகள் நாற்பத்து நாலுடன்
    எண்ணமர் சத்திகள் நாற்பத்து நால்வராய்
    எண்ணிய பூவித ழுள்ளே யிருந்தவள்
    எண்ணிய எண்ணம் கடந்துநின் றாளே.
  • 82. கடந்தவள் பொன்முடி மாணிக்கத் தோடு
    தொடர்ந்தணி முத்துப் பவளம் கச்சாகப்
    படர்ந்தல்குற் பட்டாடை பாதச் சிலம்பு
    மடந்தை சிறியவள் வந்துநின் றாளே.
  • 83. நின்றஇச் சத்தி நிரந்தர மாகவே
    கண்டிடு மேரு அணிமாதி தானாகிப்
    பண்டைய வானின் பகட்டை அறுத்திட்டு
    ஒன்றிய தீபம் உணர்ந்தாற்குண் டாமே.
  • 84. உண்டோர் அதோமுகம் உத்தம மானது
    கண்டஇச் சத்தி சாதாசிவ நாயகி
    கொண்ட முகம்ஐந்து கூறுங் கரங்களும்
    ஒன்றிரண் டாகவே மூன்றுநா லானவே.
  • 85. நன்மணி சூலம் கபாலம் கிளியுடன்
    பன்மணி நாகம் மழுகத்தி பந்தாகும்
    கன்மணி தாமரை கையில் தமருகம்
    பொன்மணி பூணாரம் பூசனைக் கானவே.
  • 86. பூசனைக் கன்னிகள் எண்ணைவர் சூழவே
    நேசவண் சத்திகள் நாற்பத்து நேரதாய்க்
    காசினிச் சக்கரத் துள்ளே கலந்தவர்
    மாசடை யாமல் மகிழந்திருந் தார்களே.
  • 87. தாரத்தி னுள்ளே தயங்கிய சோதியைப்
    பாரத்தி னுள்ளே பரந்துள் ளெழுந்திட
    ஏரது ஒன்றி எழுந்த மனோமயம்
    காரது போலக் கலந்தெழும் மண்ணிலே.
  • 88. மண்ணில் எழுந்த மகார உகாரங்கள்
    விண்ணில் எழுந்த சிவாய நமஎன்று
    கண்ணில் எழுந்தது காண்பரி தன்றுகொல்
    கண்ணில் எழுந்தது காட்சி தரஎன்றே.
  • 89. என்றங் கிருந்த அமுத கலையிடைச்
    சென்றங் கிருந்த அமுத பயோதரி
    கண்ட கரம்இரு வெள்ளிபொன் மண்டைவாய்க்
    கொண்டங் கிருந்தது வண்ண அமுதே.
  • 9. அடைந்திடும் பொன்வெள்ளி கல்லுடன் எல்லாம்
    அடைந்திடும் ஆதி அருளும் திருவும்
    அடைந்திடும் அண்டத் தமரர்கள் வாழ்வும்
    அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே.
  • 90. அமுதம தாக அழகிய மேனி
    படிகம தாகப் பரந்தெழும் உள்ளே
    குமுதம தாகக் குளிர்ந்தெழு முத்துக்
    கெழுமும தாகிய கேடிலி தானே.
  • 91. கேடிலி சத்திகள் முப்பத் தறுவரும்
    நாடிலி கன்னிகள் நாலொன் பதின்மரும்
    பூவிலி பூவித ழுள்ளே யிருந்திவர்
    நாளிலி தன்னை நணுகிநின் றார்களே.
  • 92. நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும்
    கண்டது சோதி கருத்துள் இருந்திடக்
    கொண்டது ஓராண்டு கூடி வருதற்கு
    விண்ட ஔகாரம் விளங்கின அன்றே.
  • 93. விளங்கிடு வானிடை நின்றவ ரெல்லாம்
    வணங்கிடு மண்டலம் மன்னுயி ராக
    நலங்கிளர் நன்மைகள் நாரண னொத்துச்
    சுணங்கிடை நின்றவை சொல்லலு மாமே.
  • 94. ஆமே அதோமுகம் மேலே அமுதமாய்த்
    தானே உகாரம் தழைத்தெழும் சோமனும்
    காமேல் வருகின்ற கற்பக மானது
    பூமேல் வருகின்ற பொற்கொடி யானதே.
  • 95. பொற்கொடி யாரிடைப் பூசனை செய்திட
    அக்களி யாகிய ஆங்காரம் போயிடும்
    மற்கட மாகிய மண்டலந் தன்னுளே
    பிற்கொடி யாகிய பேதையைக் காணுமே.
  • 96. பேதை இவளுக்குப் பெண்மை அழகாகும்
    தாதை இவளுக்குத் தாணுவுமாய் நிற்கும்
    மாதை இவளுக்கு மன்னும் திலகமாக்
    கோதையர் சூழக் குவிந்திடங் காணுமே.
  • 97. குவிந்தனர் சத்திகள் முப்பத் திருவர்
    நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழப்
    பரந்தித ழாகிய பங்கயத் துள்ளே
    இருந்தனர் காணும் இடம்பல கொண்டே.
  • 98. கொண்டங் கிருந்தனர் கூத்தன் ஒளியினைக்
    கண்டங் கிருந்தனர் காரணத் துள்ளது
    பண்டை மறைகள் பரந்தெங்குந் தேடுமால்
    இன்றென் மனத்துள்ளே இல்லடைந் தாளுமே.
  • 99. இல்லடைந் தானுக்கும் இல்லாத தொன்றில்லை
    இல்லடைந் தானுக் கிரப்பது தானில்லை
    இல்லடைந் தானுக் கிமையவர் தாமொவ்வார்
    இல்லடைந் தானுக்கில் லாததில் லானையே.