
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம்
- Prev
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Next
பதிகங்கள்

விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின்
விளங்கிடு மெல்லிய லானது வாகும்
விளங்கிடு மெய்நின்ற ஞானப்பொருளை
விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே.
English Meaning:
Saum Sakti is Supreme JnanaTo speak of the Eternal truth
That high above beams,
That verily is Sakti of Slender Form;
Do seek Light that is Truth of Jnana;
They who seek the Light
Will themselves like Light be.
Tamil Meaning:
விளங்கி நிற்பதாக மேலைமந்திரத்திற் சொல்லப் பட்ட மெய்ப்பொருளை இன்னதெனக் கூறின், அது சிவ சத்தியேயாம். தானே விளங்குந் தன்மையுடையதும், மெய்ம்மையானதும், அறிவே வடிவாய் உள்ளதும் ஆகிய அந்தப்பொருளை உணர்பவர்களே ஞானம்பெற்றவராவர்.Special Remark:
மேலை மந்திரத்துள், \\\"மெய்ப்பொருள்\\\" எனவும், \\\"மின்கொடியாள்\\\" எனவும் வேறுவேறு போலக் கூறப்பட்டவை அங்ஙனமாகாது ஒன்றேயாதலை முன்னிரண்டடிகளில் விளக்கிப் பின் னிரண்டடிகளில் அப்பொருளின் சிறப்புணர்த்தினார். \\\"விளங்கிடும், வரும்\\\" என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி, \\\"மெய்ப் பொருள்\\\" என்னும் ஒருபெயர் கொண்டன. \\\"மேல்\\\" என்றது மேல் நின்ற இடத்தை. `வந்த` எனற்பாலதனை, \\\"வரும்\\\" என்றதும், `தாமே` எனற்பாலதனை \\\"தானே\\\" என்றதும் வழுவமைதி. மெய்ம்மையும். ஞானமும் ஆதல் கூறவே. ஆனந்தம் ஆதலும் கொள்ளப்படும். சத்தி அஃறிணையாகவும் கூறப்படுதல் பற்றி எழுவாயை, `ஆனது` எனக் கூறினார்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage