
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம்
- Prev
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Next
பதிகங்கள்

மண்ணில் எழுந்த மகார உகாரங்கள்
விண்ணில் எழுந்த சிவாய நமஎன்று
கண்ணில் எழுந்தது காண்பரி தன்றுகொல்
கண்ணில் எழுந்தது காட்சி தரஎன்றே.
English Meaning:
Aum Sakti Arose as SivayanamaThe Pranava Mantra composed of letters A and U
From terrestrial sphere Muladhara arose
Ascended upward
And as Sivayanama to eye appeared;
Invisible it is not to the naked eye;
Visible it rose, for us to see.
Tamil Meaning:
பிருதிவி மண்டலமாகிய மூலாதரத்தினின்று பிரணவமாகிய சூக்கும எழுத்தாய்ப் புறப்பட்ட நாதம், பின் வளர்ச்சி யுற்று ஆகாச மண்டலமாகிய ஆஞ்ஞையில் `சிவாய நம` என்னும் தூல எழுத்தாய் வெளிப்பட்டு, அதற்குப் பின் கண்ணில் ஒளி வடிவாயும் என்னிடத்துப் பதிந்து நின்றது. ஆதலின் ஒளிக்காட்சி ஒருவராலும் காணப்படாதது அன்று; மற்றும் அது தன்னைக் காணுலுறுவார்க்குக் காட்சி தரவேண்டும் என்றே முன் வரும் இயல்புடையது.Special Remark:
`விண்ணில் சிவாய நம என்று எழுந்து கண்ணில் எழுந்தது` என்க. பூபுர சத்திகட்கு உள்ளாயிருக்கும் சிவ சத்தியது காட்சி நாத தரிசனத்தின் வழிக் கூடும் என உணர்த்தியவாறு. தோற்ற முறைபற்றி, `அகார உகார மகாரம்` என்றலேயன்றி, ஒடுக்கமுறை பற்றி `மகார உகார அகாரம்` என்றலும் கூடுமாதலின், `மகாரம் உகாரங்கள்` என்றார். மோனை நயம் வேண்டாது, `அகார உகாரங்கள் ` என்றேயும் பாடம் ஓதுப. கொல், அசை.இதனால், மேல், ``தாரத்தினுள்ளே தயங்கிய சோதி`` எனப் பட்ட சத்தியைத் தரிசிக்குமாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage