
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம்
பதிகங்கள்

ஆனை மயக்கும் அறுபத்து நால்தறி
ஆனை யிருக்கும் அறுபத்து நால்ஒளி
ஆனை யிருக்கும் அறுபத்து நால்அறை
ஆனையும் கோடும் அறுபத்து நாலிலே.
English Meaning:
Jiva Chakra of 64 ChambersSixty and four are the instruments of enjoyments
That tempt Jiva,
Sixty and four are Kalas within Jiva,
Sixty and four are the Chambers of Jiva`s Chakra
Sixty and four, where Siva Sakti are.
Tamil Meaning:
ஐம்புலன்களாகிய யானைகளையும் மயங்கி அடங்கச் செய்து கட்டி வைக்கும் அறுபத்து நான்கு தறிகளாயும், இடப வாகனத்தில்மேல் வருகின்ற தலைவனாகிய சிவபிரானிடத்தில் உள்ள அறுபத்து நான்கு சத்திகளாயும் விளங்குவன. பிரணவத்தை முதலாகக் கொண்ட பிராசாத மந்திரத்தின் அக்கரங்கள் அடங்கிய சக்கரத்தில் உள்ள அறுபத்து நான்கு அறைகள். அவ் அறைகளை யுடைய சக்கரத்தை வழிபட்டால், மத யானையும் வணங்கும் கடவுள் தன்மையைப் பெறலாம்.Special Remark:
``ஆனை`` நான்கில் இரண்டாவதை, `ஆன்+ஐ` எனப் பிரித்துப் பொருள்கொள்க. ஏனைய மூன்றும் சொல் ஒன்றாயினும் வேறு வேறு பொருளைக் குறித்தலின் சொற்பின் வருநிலை. இரண்டாம் அடி, மடக்கு. முதலடியில், உள்ள ஆனை. உருவகம். மூன்றாம் அடியில் உள்ள ஆனை உவம ஆகுபெயராய் அதனோ டொத்த ஓங்காரத்தைக் குறித்தது. நான்காம் அடியில் உள்ளது அஃறிணை இயற்பெயராய், ஆற்றலால், மதங்கொண்ட யானையைக் குறித்தது. கோடுதல் - வளைதல்; வணங்குதல். `ஆனையும், அதன் கொம்பும் அறுபத்து நாலு அறைகளில் அடங்கிவிடும்` என்பது நயம். ``அறுபத்து நால்`` என்பது அதன் வழிபாட்டின்மேல் நின்றது. அதில் உள்ள `இல்` ஏதுப் பொருட்கண் வந்த ஐந்தாம் உருபு. அறுபத்து நான்கு அறைகளும் அறுபத்து நான்கு சத்திகளாதல் இரண்டாமடியில் கூறப்பட்டது. இச்சக்கரம் எட்டெழுத்துக்களால் ஆவதாகலின், `அட்டாட்சரி சக்கரம்` எனவும் அவை பிராசாத அட்சரங்கள் ஆதலின், `பிராசாத சக்கரம்` எனவும் சொல்லப்படும். அஃது, கீழே தனியே தரப்பெற்றுள்ளது.இதனுள், அக்கரங்கள் இடந் தொட்டு வலமாகச் செல்லும் வரிகளை முறையே நோக்கினும், மேற்றொட்டுக் கீழாக வரும் வரிகளை முறையே நோக்கினும் ஒருவகையாகவே இருத்தல் அறியத் தக்கது. அதனால், அவ் அக்கரங்களை ஒருமுறை இடமிருந்து வலமாகவும், மறுமுறை மேற்றொட்டுக் கீழாகவும் மாறிமாறி நோக்கிக் கணித்து வழிபடின் பயன் கூடும்.
இதனை, இத்தந்திரத்தின் முடிவாக இறுதிக்கண் அனைத்தும் அடங்கக் கூறினார் என்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage