
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம்
- Prev
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Next
பதிகங்கள்

உண்டோர் அதோமுகம் உத்தம மானது
கண்டஇச் சத்தி சாதாசிவ நாயகி
கொண்ட முகம்ஐந்து கூறுங் கரங்களும்
ஒன்றிரண் டாகவே மூன்றுநா லானவே.
English Meaning:
Haum Sakti (Sadasiva Nayaki) — in Ajna CentreThe Sakti of the Sadasiva,
Has faces five and hands ten,
Of these, the downward looking face (Athomukha)
Is divine far indeed.
Tamil Meaning:
சதாசிவனது சத்தியாகிய சதாசிவைக்கு (அவனைப் போலவே) யாவரும் காண உள்ள முகங்கள் ஐந்து. எனினும், ஆறாவதாக அதோமுகம் ஒன்றும் (அங்ஙனமே) உண்டு. மேலான அந்தமுகமே, மேல் ``சிறியள்`` (வாலை - 1382) எனப்பட்ட சத்தி. இனிச் சதாசிவைக்கு முகம் ஆறானதற்கு ஏற்பக் கரங்களும் ஒருமுகத்துக்கு இரண்டாகப் பன்னிரண்டு ஆயின.Special Remark:
``சதாசிவ நாயகி கொண்ட முகம் ஐந்து`` என்பதனை முதலில்வைத்து. அதன்பின், `எனினும்` என்பது வருவிக்க. `உத்தம மான அது` என்பதில் ஓர் அகரமும், `அதுவே` என்னும் ஏகாரமும் தொகுத்தல் பெற்றன. ``கொண்ட`` என்பதற்கு. `யாவரும் அறியக் கொண்ட` என்பது ஆற்றலால் வந்தது. `ஒன்றுக்கு` என நான்கவாது விரிக்க.மூன்று நால் - பன்னிரண்டு ஈற்றடி எண்ணலங்காரமாயும் நின்றது. இரண்டாம் தந்திரத்துள், `சிவனுக்கு அதோமுகம் ஒன்று உண்டு` என்பதும், `அதுவே நிலவுலகத்தார்க்கு முருகன் முதலாக வந்து அருள் புரிவது` எனவும் கூறியவாறே 1 இங்கும் கூறப்பட்டமை நோக்கத் தக்கது. இதனுள்ளும் இன எதுகை வந்தது.
இதனால், மேல் நிலச் சத்தியது முழு நிலையின் பகுதியே கீழ் நிலத்திற்கு வந்து அருளுவதாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage