
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம்
- Prev
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Next
பதிகங்கள்

கடந்தவள் பொன்முடி மாணிக்கத் தோடு
தொடர்ந்தணி முத்துப் பவளம் கச்சாகப்
படர்ந்தல்குற் பட்டாடை பாதச் சிலம்பு
மடந்தை சிறியவள் வந்துநின் றாளே.
English Meaning:
Krim Sakti as a GirlShe, that transcended thought all,
Wears the diadem of gold,
Her corset is of gems, pearls and corals made,
Her silken dress spreads below Her slender waist
Her Feet hold the anklets
Thus, adorned, as a girl
She stood before me.
Tamil Meaning:
கீழ் நிலங்களைக் கடந்து மேல் நிலத்தில் இருப் பவளாகிய அச் சத்தி அடியவர் பொருட்டு, தலையிற் கவிக்கும் முடி பொன்னால் இயன்றதும், காதில் அணியும் தோடு மாணிக்கத்தால் இயன்றதும், கழுத்து முதலியவற்றில் தொடரப் பொருந்திய அணிகள் முத்துக்களால் இயன்றனவும், கச்சுப் பவளத்தால் இயன்றதும், அரையில் உடுத்திய உடை பட்டினால் இயன்றதும், பாதத்தில் அணிவது சிலம்புமாக, இளம் பெண்ணாய்க் கீழ் நிலங்களிலும் வந்த நிற்கின்றாள்.Special Remark:
``பொன் முடி, மாணிக்கத்தோடு`` முதலியவற்றை. `முடி பொன், தோடு மாணிக்கம்` முதலியனவாக மொழிமாற்றி, எல்லா இடங்களிலும் `ஆக` என்பதை இயைத்துக் கொள்க. `அல்குல் ஆடைபட்டு` எனக் கூட்டுக. பாதம் ஆகுபெயர். ``மடந்தை சிறியவள்`` என்பது இருபெயரொட்டு. `சிறியவளாய்` என ஆக்கம் வருவிக்க. சிறியவள், வாலை. ``சிறியவளாய்`` என்பதை, `சிறீயினில், குமீறியில், கமீறியில்` என்பனவாக வேறு வேறு ஓதி, `அவ்வப் பீசாக்கரத்தில் வந்து நின்றாள்` எனவும் பொருள்கொள்வர். கும் - க்ரோம்.இதனால், மேலைச்சத்தி கீழ் நிலங்களில் இளையவளாய் நிற்றலும், அவளது வடிவமும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage