
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம்
- Prev
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Next
பதிகங்கள்

அமுதம தாக அழகிய மேனி
படிகம தாகப் பரந்தெழும் உள்ளே
குமுதம தாகக் குளிர்ந்தெழு முத்துக்
கெழுமும தாகிய கேடிலி தானே.
English Meaning:
Aum Sakti DescribedBeauteous like ambrosia is Her form,
As crystal pure She rises in me,
Like a lily She is,
Like the pearl of deep cool waters She is,
Like ambrosia rich, immortal She is.
Tamil Meaning:
ஆம்பல் போலும் வாயிடத்துக் குளிர்ந்த முத்துப் போலும் நகைபொருந்தி விளங்கும் அந்நிலையினளான, அழிவற்ற அச்சத்தி, தன் அடியவர்க்குச் சந்திர மண்டலத்து அமுதம் உளதாகும் படி தனது அழகிய மேனி படிகம்போல்வதாகக் கொண்டு அவர்தம் அகத்தே நிறைந்து விளங்கி நிற்பாள்.Special Remark:
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. குமுதமும், முத்தும் உவம ஆகுபெயர்கள். கெழுமுதல் - பொருந்துதல். ``அது`` நான்கில், முன்னைய மூன்றும் பகுதிப் பொருள் விகுதிகள்; இறுதியது `அந்நிலை` என்னும் பொருட்டு. `கெமுதமுது` என்பது பாடம் அன்று. நான்காமடி மூன்றாமெழுத்தெதுகை பெற்றது. இரண்டாமடியும் அன்னதுபோலும்!இதனால், அச்சத்தி அவர்க்கு அமுதம் வழங்குமாறு கூறப் பட்டது. இதனுள் அவளது திருக்கோலமும் உடம்பொடு புணர்த்தலால் கொள்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage