
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம்
- Prev
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Next
பதிகங்கள்

தாளதி னுள்ளே தயங்கிய சோதியைக்
காலது வாகக் கலந்து `கம் ஜம்` என்று
மாலது வாக வழிபாடு செய்துநீ
பாலது போலப் பரந்தெழு விண்ணிலே.
English Meaning:
Perform Kundalini Yoga Before Gaum SaktiThe Kundalini Fire in Muladhara resides;
Course your breath to unite in Her in Anahatha
And in devotion true do Japa of Gaum Jam and the adhara above ascend,
You shall into the heaven within rise,
That is milky white pure (Solar Sphere).
Tamil Meaning:
நாவடியில் பொருந்திய ஒளிவடிவாய் விளங்கு கின்ற சத்தியைப் பிராண வாயுத் துணையாக, `கம், ஜம்` என்று செபிக்கும் செபத்தால் தலைப்பட்டு அன்போடு வழிபட்டு, அதன் பயனாக மிக்க ஒளியுடைய உடம்போடு வானத்தில் இயங்கும் (ஆகாய கமனம் செய்யும்) ஆற்றலைப் பெறுவாயாக.Special Remark:
அந்தாதி நயம் வேண்டி, சிறுபான்மை லகரத்திற்கு ளகரம் போலியாகும் முறைமையை மேற்கொண்டு. `தாலது` எனற் பாலதனை, ``தாளது`` என ஓதினார். `கம்` என்பதும் ஆகாயத்திற்குரிய பீசமாகும். `ஜம்` என்பது ஜகத்துக்குத் தலைவியாம் ஜகதா தேவிதன் பீசம். இவற்றைச் செபித்து இவளை வழிபடவே வான்வழி இயங்கும் ஆற்றல் உண்டாவதாம். `ஜம்` என்னாது, `ஐம்` என்ப பொதுப்பட ஓதுதல் பாடமாகாது. இனி, `கம்ஜம்` என்பதன் கருத்து அறியாதார். `கலந்து கொள்` எனப் பாடம் வேறாக ஓதுவர். மிக்க ஒளியது நிறம் வெண்மையாகலின், ``பாலதுபோலப் பரந்து`` என்றார். முதலடி இனவெதுகை.இதனால், இச்சத்தியை ஒரு சிறப்புப் பயன் கருதி வழிபடும் முறைமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage