
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம்
- Prev
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Next
பதிகங்கள்

தாரத்தி னுள்ளே தயங்கிய சோதியைப்
பாரத்தி னுள்ளே பரந்துள் ளெழுந்திட
ஏரது ஒன்றி எழுந்த மனோமயம்
காரது போலக் கலந்தெழும் மண்ணிலே.
English Meaning:
Practise Kundalini Before Haum SaktiThe Fire that burns in the Muladhara
To rouse it and send it upward over adharas,
Do centre your mind on the root mantra (Aum)
Your mind-force then lifts it up, heavenward,
Like the clouds over terrestrial sphere.
Tamil Meaning:
மேற்கூறிய பூபுர தேவியர்பால் விளங்குகின்ற ஒளிவடிவான சிவசத்தியை உடன்பின் அகத்திலே ஆதாரங்களில் தியானிக்கின். எழுச்சி பெற்றுப் புற விடயங்களின் மேல் செல்லுகின்ற மனம், நிலத்திற் கலந்த நீர் அந்நிலத்தின் தன்மையதே ஆனாற் போலத்தியானிப்போனது தன்மைக்கு மாறாகாமல் அவனோடே பொருந்தி நிற்கும்.Special Remark:
தாரம் - ஆதாரம், இது மேற்கூறிய சக்கரங்களுக்கு உரியதாயப் பூபுரத்தைக் குறித்துப் பின் அவற்றில் உள்ள தேவியர்களைக் குறித்தது. பாரம் - பருவுடல். ``பரந்து`` என்பதை, `பரக்க` எனத் திரிக்க. `மண்ணிலே காரது போலக் கலந்தெழும்` என மாற்றிக் கொள்க. கார் - மேகம்; அது நீருக்கு ஆயிற்று. `தாரம் மூலாதாரம்` எனவும், `சோதி அதன் கண் உள்ள தீ` எனவும் கொண்டு, `யோகமுயற்சியால் மனோலயம் உளதாம்` என்பதே இம்மந்திரத்திற்குப் பொருளாக உரைப்பாரும் உளர். அது, மேல் பலவிடத்துங் கூறப்பட்டதன் மேலும், இவ்விடத்திற்குச் சிறிதும் பயனுடைத் தாகாமை அறிக.இதனால், இச்சக்கர வழிபாட்டில் சிவ சத்தியை மறவாமை வேண்டுதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage