
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம்
- Prev
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Next
பதிகங்கள்

ஆமே அனைத்துயிர் ஆகிய அம்மையும்
தாமேசகலமும் ஈன்றஅத் தையலும்
ஆமே அவளடி போற்றி வணங்கிடில்
போமே வினைகளும் புண்ணிய னாகுமே.
English Meaning:
Gaum Sakti is Mother of AllShe is the Mother that all life is
She is the Mother that all life created
Worship at Her Feet, and all things will yours be;
Your Karmas will vanish, you shall holy become.
Tamil Meaning:
தானே எல்லாமாய் நிற்கின்ற சத்தி, அனைத்துயி ராகியும் நிற்கின்றாள். எல்லாப் பொருள்களும் தம் தன்மையில் தாமேயாயும், சத்தியின் வியாபகத்தால் தம்மை ஈன்ற அவளாகியும் நிற்கும். ஆகையால் பக்குவன் அவளை வணங்கிய வழியே வினை நீக்கமும், தவப் பேறும் ஆகிய பயன்களை எய்துவான்.Special Remark:
`அம்மையும்` என்னும் உம்மையைப் பிரித்து ``அனைத் துயிர்`` என்பதனோடு கூட்டி, `ஆகிய அம்மை அனைத்துயிரும் ஆம்` எனவும், `சகலமும் தாமே ஆம், ஈன்ற அத் தையலும் ஆம்` எனவும், `ஆதலின் அவள் அடிபோற்றி வணங்கிடினே வினைகளும் போம்; புண்ணியன் ஆகும்` எனவும் கூட்டி உரைக்க. புண்ணியம், இங்கு தவம்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage