
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம்
- Prev
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Next
பதிகங்கள்

நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும்
கண்டது சோதி கருத்துள் இருந்திடக்
கொண்டது ஓராண்டு கூடி வருதற்கு
விண்ட ஔகாரம் விளங்கின அன்றே.
English Meaning:
Practise Kundalini for a YearMy thoughts stood still in meditation,
The Kundalini Fire filled the adharas,
I beheld the Light above in Sahasrara,
And as I held it in my heart,
In a year Sakti appeared,
The Sakti that is of luminous Aum.
Tamil Meaning:
இயல்பாக உள்ளத்தில் உள்ள, நிரம்பிய விளக் கொளியாகிய சத்தி, நவாக்கரி சக்கரத்தில் கட்புலனாம் விளக்கொளி யாய் விட்டது. இனி அவ்வொளி உள்ளத்திலும் தோன்றி விளங்குதற்கு வேண்டப்பட்ட காலம் ஓராண்டு. அப்பயன் கைக்கூடுதற்குத் துணை யாகவே மேற்கூறப்பட்ட ஔகாரம் முதலிய பீசாக்கரங்கள் அச் சக்கரத்தில் விளங்கி நிற்கின்றன.Special Remark:
`நின்றதாகிய வன்னி` என இயையும். வன்னி, ஆகுபெயர். `கண்டதாகிய சோதியாயிற்று` என்க. கொண்டது. வேண்டப்பட்டது. `ஔகாரம்`` என்றது, `அது முதலாகிய அக்கரங்கள்` எனப் பொருள் தந்தது. `கூடி வருகைக்கு அவை விளங்கின` எனவே, ஓராண்டுக் காலம் அவற்றைக்கணிக்க` என்றதாயிற்று. முதலடி இனவெதுகை.இதனால், அவ்வழிபாட்டினை ஓராண்டுச் செய்வார் பெரும் பயன் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage