
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 1. அசபை
பதிகங்கள்

ஆனந்தம் ஆனந்தம் ஒன்றென் றறிந்திட
ஆனந்தம் ஆஈஊ ஏஓம்என் றைந்திட
ஆனந்தம் ஆனந்தம் அஞ்சும்அ தாயிடும்
ஆனந்தம் ஆம்ஹிரீம் ஹம்க்ஷம்ஹாம் ஆகுமே.
English Meaning:
Chant Sivaya Nama and Enjoy Bliss of SivaIt is the Sukshma (Subtle) mantra;
Chant it eight thousand times;
You shall see the (Sushumna) Path Subtle,
You may enjoy the bliss of Siva
That is subtlest of all.
Tamil Meaning:
`சிவானந்தம் ஒன்றே ஆனந்தம்` என்று உணர, அவ்வானந்தம் விளைவதாம். `ஆ, ஈ, ஊ, ஏ, ஓம் என்னும் ஐந்தெழுத்துக்களை அச்சக்கரத்தில் இட்டுச் செபிக்க அவ்வானந்தம் மிக விளையும். அந்த ஐந்தெழுத்துத் தொடரே` திருவைந்தெழுத்துத் தொடருமாம். இனி, அம், ஹ்ரீம், ஹம், க்ஷம், ஹாம்` என்னும் ஐந்தைத்தாமும் மேற்கூறிய `ஆ` முதலிய ஐந்திற்கு ஈடாகவும், திருவைந்தெழுத்திற்கு ஈடாகவும் கொள்ளலாம்.Special Remark:
முதலடியில் இரண்டாவதாக நின்ற ஆனந்தம்`, சிவானந்தத்தைச் சிறப்பு வகையாற் குறித்தது. `ஒன்றே` என்னும் தேற்றேகாரம் தொகுத்தல் பெற்றது. மூன்றாம். அடியில் பெயர்ப் பயனிலையாய் நின்ற அடுக்கு, மிகுதி குறித்து நின்றது. `ஆ` முதலிய ஐந்தும் மகாரத்தைக் கூட்டியும், கூட்டாதும் ஓதப்படும் என்பது உணர்த்துதற்கு முதல்நான்கனை மகாரம் இன்றியும், இறுதியதை மகாரம் கூட்டியும் ஓதினார் `அது அஞ்சும் ஆயிடும்` என மாற்றிக்கொள்க. ஈற்றடியில் நின்ற ``ஆனந்தம்` அதனைத் தருவதாய மந்திரத்திற்கு ஆகி, எழுவாயாய் நின்றது. இவ்வடியில் மூன்றாவதாக நிற்கும் எழுத்தையும் `அம்` என ஓதுதலும், இரண்டாம் நான்காம் அடிகளிலும் அடுக்கிவர ஓதுதலும் பாடமாகா.இதனால், மேற்கூறிய வழிபாட்டில் செபித்தற்கு உரிய மந்திரங்கள் இவை என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage