
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 1. அசபை
பதிகங்கள்

தானே தனக்குத் தகுநட்டந் தானாகும்
தானே அகார உகாரம தாய்நிற்கும்
தானேரீங் காரம்அத் தத்துவக் கூத்துக்குத்
தானே உலகில் தனிநடந் தானே.
English Meaning:
Letters A and U are Tattva DanceHe is unto Himself in His Dance;
He stands as A and U;
He is the One for Mayaic Dance of Tattvas;
He dances the Dance, peerless here below.
Tamil Meaning:
சிவன், தானே தான் ஆடத்தக்க கூத்து வகைகளை வகுத்துக்கொள்வான்; பின்பு அக்கூத்துக்களை மந்திரங்களையே வடிவாகக்கொண்டு ஆடுவான். அக்கூத்து வகைகளுள் சத்தியின் கூத்திலும் தான் நிறைந்து நிற்பான். சில கூத்துக்களைத் தன்னுடையன வாகவே ஆடி நிற்பான்.Special Remark:
`அவனது நிலையை அறிபவர் யார்` என்பது குறிப் பெச்சம். ``அகார, உகாரம்`` என்றது அவற்றை அடியாகக் கொண்டு எழும் மந்திரங்களை உணர்த்திற்று. `ஹ்ரீம்` என்பது சத்தி பீஜம் ஆதலின் அத்தத்துவக் கூத்து சத்தியினுடையதாயிற்று. ``ரீங்காரம்`` என்றது, `அக்கூத்திற்கு மூலம்` என்றவாறு. ``தனி நடம்`` என்றது, தன்னுடை யவற்றை. மூன்றாம் அடியை அகரச்சுட்டின்றி ஓதுதல் பாடம் அன்று.இதனால், மேல், ``சிவன் திருமேனி`` எனக் கூறப்பட்டதில் இடம்பெற்றுநின்ற சிவனது பெருமை கூறப்பட்டது. சத்தியின் பெருமை மேலெல்லாம் சொல்லப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage