
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 1. அசபை
பதிகங்கள்

ஆமே சிவங்கள் அகார உகாரங்கள்
ஆமே பரங்கள் அறியா இடம்என்ப
ஆமே திருக்கூத் தடங்கிய சிற்பரம்
ஆமே சிவகதி ஆனந்த மாமே.
English Meaning:
Letters A and U are Si and VaLetters A and U are Si (Siva) and Va (Sakti)
They supreme are;
They are Space, beyond reach of thought
They are Spaces Vast, of Intelligence Supreme,
Where He His Holy dance performs;
Letters A and U are Refuge Finale and Joy Eternal.
Tamil Meaning:
பிரணவ யோகிகட்கு அகார உகாரமாய் நிற்கின்ற பிரணவ கலைகள் சிவயோகிகட்கு முறையே திருவைந் தெழுத்தில் சிகார வகாரங்களாய் நிற்கும். (எனவே சிகார வகாரங்களின் பொருள்களாகிய அபர சிவனும், ஆதி சத்தியும் சொல்லால் உணரப் படுபவர் என்பதாம்.) சொல்லால் உணரப்படாத நிலையில் நிற்பவர் பரசிவனும், பராசத்தியுமே. அவர்களது நிலை ஐந்தொழிற்கூத்தொழிய ஞான மாத்திரமாய், மேல் நிற்பதாம். `சிவ கதி` எனவும், ``சிவானந்த மயம்` எனவும் சொல்லப்படுகின்ற பரநிலை அவர்களது நிலையேயாம்.Special Remark:
`பிரணவ யோகத்தோடு நில்லாது, சிவமந்திர யோகத்தில் செல்வோரே நாதத்தைக் கடந்து, பரநிலையை எய்துவர்` என்பதை உணர்த்துவார், அவர்க்கும் பிரணவம் பயனளிக்குமாற்றை முதற்கண் கூறினார். `அகார உகாரங்கள் சிவங்கள் ஆமே` எனக் கூட்டுக.சிவங்கள் என்றது, `சிம், வம்` என்னும் எழுத்துக்கள் என்றவாறு. சிகார வகாரங்களைத் தனிப்பட எடுத்துக் கூறுமிடத்து இவ்வாறு விந்துவுடனாகக் கூறுதலும் உண்டு. `அறியா இடம் பரங்களே ஆம்` என்க. இடத்தில் உள்ளவர்களை ``இடம்`` எனவும், பரமாய் நிற்பவர்களை, ``பரம்`` எனவும் கூறினார். சிவனையும், சத்தியையும் வேறுவேறாக வைத்து எண்ணுதலின், ``பரங்கள்`` எனப் பன்மையாற் கூறினார். இரண்டாம் அடியின் இறுதியில், `அவையே` என்னும் எழுவாய் வருவிக்க. `இவை அறியா இடம்` எனவே முன்னர்க் கூறியன அறியும் இடமாதல் பெறப்பட்டது.
இதனால், அசபை சிவ யோகிகட்குச் சிவமந்திரமாய்ப் பயன்படுதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage