
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 1. அசபை
பதிகங்கள்

தலைவனு மாய்நின்ற தற்பரக் கூத்தனைத்
தலைவனு மாய்நின்ற சற்பாத் திரத்தைத்
தலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞானத்
தலைவனு மாய்நின்ற தாளிணை தானே.
English Meaning:
The Lord is SupremeHe is the Lord who stood dancing eternal;
He is the Lord who the holy one is;
He is the Lord who unfolds Jnana`s honey-laden Flower;
He is the Lord whose Feet are holy beyond peer.
Tamil Meaning:
யாதொரு தொழிலுமின்றிச் சிவனாய் நிற்றலே யன்றி ஐந்தொழில் செய்யும் பதியாயும் நிற்கின்ற முதல்வனது தன்மையையும், அம்முதல்வனது தொழில்களில் பிறவற்றின் பயனையன்றி, இறுதித் தொழிலாகிய அருளலின் பயனையும் ஏற்கும் நல்ல கொள்கலமாகிய பக்குவம் வாய்ந்த உயிரினது தன்மையையும் மகரந்தங்களாக உதிர்த்து மலர்கின்ற திருவாய்மலரையுடைய சிறந்த ஞானாசிரியனாயும் நிற்பன சிவனது இரண்டு திருவடிகளே.Special Remark:
தற் பரம் - தனக்கு (ஆன்மாவிற்கு) மேலானவன். ஆசிரியன் தன்னைச் சிவமாகப் பாவிக்கும் பாவனையில் நின்றே உபதேசித்தல் பற்றி இங்கு, ``தன்`` என்று ஆசிரியனையே சுட்டி, `அவனுக்கு மேலானவன்` என்றார். அபக்குவிகட்கு மேலாய் நிற்றல் பற்றிப் பக்குவியை, ``தலைவன்`` என்றார். ``தாதவிழ்`` என்றதை அவ்வடியின் முதற்கண்வைத்து உரைக்க. அது, ``ஞானத்தலைவன்`` என்னும் முதற்பெயரோடே முடியும். மூன்றாவதாக வந்த ``தலைவன்`` என்பது, ``ஞானாசிரியருள் மேம்பட்டவன்`` எனப் பொருள் தந்தது. இறுதியில் உள்ள `நின்ற` என்பது முற்று. ``தானே`` என்பது பன்மை யொருமை மயக்கம்.இதனால், தடத்த நிலையில் உள்ள சிவனுக்குத் திருவடிகளாய் உள்ளது அவனது `அருள்` எனப்படும் சத்தியே என்பது குறிக்கப் பட்டது. இதனது பயன், வருகின்ற மந்திரம் முதலியவற்றுள், ``இணையார் திருவடி`` என்பனபோலக் கூறும் வழக்கினது உண்மையை உணர்தல்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage