
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 1. அசபை
பதிகங்கள்

பொற்பாதம் காணலால் புத்திரர் உண்டாகும்
பொற்பாதத் தாணையே செம்புபொன் னாயிடும்
பொற்பாதங் காணத் திருமேனி யாயிடும்
பொற்பாதம் நன்னடஞ் சிந்தனை சொல்லுமே.
English Meaning:
Chant Sivaya Nama and Behold Golden FeetYou shall behold the Golden Feet
You shall have children noble;
In the name of that Golden Feet I say,
The copper that is Jiva,
Will become gold that is Siva;
And as you behold the Golden Feet,
You too shall His Form assume;
Centre the mantra in your thoughts,
And witness the great Dance of Golden Feet.
Tamil Meaning:
திருவருள் கைவரப் பெறுதலால் சிவனுக்கு மைந்தராம் தன்மை உளதாகும்; `செம்பு பொன்னாதல் போல்வது` என மேலெல்லாம் சொல்லிவந்த சிவமாம் தன்மையும் கிடைக்கும். அதனால், மாயாகாரிய உடம்பும் சிவனது அருள்மயமான உடம்பாய்விடும். ஞான நடனத்தின் உண்மை தெளிவாகும்.Special Remark:
இதனுள்ளும் பொருட் பின்வருநிலையணி வந்தமையின், முதலடியில் `காணலாம்` என ஓதுதல் பாடம் அன்று. ``புத்திரர்`` என்பது பொருளாகுபெயராய் அவரது பண்பின்மேல் நின்றது. அங்ஙனமன்றாயின், `உண்டாகும்` என்பதனோடு இயை யாமை அறிக. `ஆணையாலே` என உருபு விரிக்க. ஈண்டும் ``செம்பு பொன்னாயிடும்`` என ஒட்டணியாக ஓதியது, `இவ்வுலகில் உண்மை யாகவே செம்பைப் பொன்னாக்குதல் முதலிய சித்திகளாகிய இடை நிலைப் பயனும் கூடும்` என்பதும் தோன்றுதற்பொருட்டு. புத்திரராந் தன்மை பெறுதற்கு முத்தினாலான சிவிகை, சின்னம் முதலிய சிறப்புக்களைப் பெற்று ஞானாசிரியத் தன்மைபெற்று விளங்கிய ஆளுடைய பிள்ளையாரிடத்தும், செம்பு பொன்னாவதற்குச் செங்கல் பொன்னாகவும், ஆற்றிலிட்ட பொன் குளத்திற் கிடைக்கவும், தம்மை வழிபட்ட பெருமிழலைக் குறும்பர்க்குச் சிவயோகம் எளிதில் கூடவும் பெற்று விளங்கிய ஆளுடைய நம்பிகளிடத்தும் எடுத்துக்காட்டுக் கண்டுகொள்க. அவ்விருவரையும் திருவருள் கைவரப் பெற்றமை மாத்திரத்திற்கு ஒப்புமைகொள்க. நான்காம் அடியில், `பொற்பாதம் சொல்லும்` என இயையும். ``நடஞ் சிந்தனை`` என்பது தொழிற் பெயரொடு தொக்க இரண்டாவதன் தொகை. ``சிந்தனை`` என்பது அதன் முடிவின்மேல் நின்றது.இதனால், திருவருளால் மக்கள் எய்தும் பயன்கள் வகுத்தோதப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage