
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 1. அசபை
பதிகங்கள்

தானே தனக்குத் தலைவியு மாய்நிற்கும்
தானே தனக்குத் தனமலை யாய்நிற்கும்
தானே தனக்குத் தனமய மாய்நிற்கும்
தானே தனக்குத் தலைவனு மாமே.
English Meaning:
Lord is AllHimself as His Lord stands;
Himself as His Mountain stands;
Himself as Pervasive Himself stands;
Himself He stands,
As Lord that is Himself.
Tamil Meaning:
``திருக்கூத்து ஆமிடம்`` என மேற்குறிக்கப் பட்ட அருளாகிய சத்தி தனக்கு ஒரு தலைவியை வேண்டாது தானே தனக்குத் தலைவியாய் நிற்பாள்; மேலும், தானே தனக்கு இன்றியமையாத பொருள்களாயும், தன்னுள்ளே சூக்குமமாயும் நிற்பாள். இனி, தனக்குத் தலைவனாகிய சிவனும் அவளே.Special Remark:
முதல் அடியில் ``தலைவனுமாய்`` என ஓதுதல் பாடம் ஆகாமை அறிந்துகொள்க. தன மலை - செல்வமாகிய மலை; இதனை `விபூதி` என்பர், பின்வந்த ``தனம்``, `தன்னம்` என்பதன் இடைக் குறை.இதனால், மேல். `அருள்` எனப்பட்ட சத்தியது சிறப்பு உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage