
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 1. அசபை
பதிகங்கள்

வாறே சிவாய நமச்சிவா யந்நம
வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை
வாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்
வாறே செபிக்கில் வருஞ்செம்பு பொன்னே.
English Meaning:
Chant Sivaya Nama and Behold DanceThis the way to chant;
Sivaya Nama, Sivaya Nama;
If you chant that way,
No more birth will be;
With Lord`s Grace,
You shall behold the Eternal Dance;
And copper (that is Jiva) turns into gold (that is Siva).
Tamil Meaning:
மேற்கூறிய முறையால் ஞான நடனத்தின் வடிவமாகிய, `சிவாயநம` என்னும் மந்திரத்தைப் பலகாலும், தொடரஓதிப் பயின்றால் இறப்பும், பிறப்பும் இல்லையாகும். அதற்குமுன்னே அவ்வோதுதலானே ஞானநடனத்தை நேரே காணுதல் கூடும். முன்னே சொன்ன செம்பு பொன்னானது போன்ற பயனாகிய சிவமாந்தன்மைப் பெரு வாழ்வும் கிடைக்கும்.Special Remark:
அடுக்கு, பன்முறை கூறுதலை உணர்த்திற்று. பேர், முதனிலைத் தொழிற்பெயர். பேர்தல், உயிர் ஓருடலை விட்டுப் பிறிதோர் உடலைத் தேடிச் செல்லுதல். அஃது இல்லை என்றது, `வீடடையும்` என்னும் பொருட்டாய் நின்றது. `பிறப்பில்லை` என்று மேற்கூறியதனை எதிர்மறை முகத்தான் வலியுறுத்தவாறு.இதனால், மேற்கூறிய சக்கரத்தில் பொறித்தற்கு உரிய மந்திரமும், அதன் சிறப்பும் பயனும் கூறப்பட்டன. இவ் விரு மந்திரங்களால் சக்கர வழிபாடு பொதுவாக விதிக்கப்பட்டது; விளக்கம் வருகின்ற அதிகாரத்துட் கூறப்படும்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage