
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 1. அசபை
பதிகங்கள்

பொன்னான மந்திரம் புகலவும் ஒண்ணாது
பொன்னான மந்திரம் பொறிகிஞ் சுகத்தாகும்
பொன்னான மந்திரம் புகைஉண்டு பூரிக்கில்
பொன்னாகும் வல்லோர்க் குடம்புபொற் பாதமே.
English Meaning:
Chant Sivaya Nama in SilenceThis mantra is golden;
Chant it not loud,
Just say it;
Your body glows red,
If you take it in slow,
As you breath in,
Your body becomes gold;
And in time,
Shall you behold the Golden Feet of the Lord.
Tamil Meaning:
பொன்போலச் சிறந்ததாகிய மேற் சொன்ன மந்திரம் வாயாற் சொல்லப்படாது. அதனால், அது மேற்கூறிய சக்கரத்துள் குங்குமத்தால் பொறிக்கப்படும். அங்ஙனம் பொறிக்கப் பட்ட அது தூப தீபங்களை ஏற்று மகிழுமாயின், அவ்வாறு மகிழ்விப் போரது உடம்பு பொன்போல ஒளிவிட்டு விளங்கும். மேலும், அதனை நன்கு வழிபட வல்லவர்க்கு அதனால் விளையும் பெரும் பயன், சிவபெருமானது பொன்போலும் திருவடியை அடைதலாகும்; அஃதாவது, `சிவனது அருள் கைவரப்பெறுதல் கூடும்` என்பதாம்.Special Remark:
பொறி, முதனிலைத் தொழிற் பெயர். கிஞ்சுகம் - முள்முருக்கு. அஃது அதனோடு நிறத்தால் ஒத்த குங்குமத்திற்கு உவம ஆகுபெயராயிற்று. குங்குமத்தால் எழுதுதல் வெட்டுவாயின்மேல் என்க. ``உடம்பு`` என்பதை, ``பொன்னாகும்`` என்பதன்பின்னர்க் கூட்டி வேறு தொடராக முடிக்க. `பயன்` என்பது சொல்லெச்சமாக எஞ்சிநின்றது.இதனால், மேலதன் வழிபாட்டுமுறை சிலவும், அதன் பயன்களுள் முதலதும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage