
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 1. அசபை
பதிகங்கள்

தராதல மூலைக்குத் தற்பரம் மாபரன்
தராதல வெப்பு நமவா சியஆம்
தராதலம் சொல்லின் தான்வா சியஆம்
தராதல யோகம் தயாவாசி ஆமே.
English Meaning:
Variations of NamasivayaHe is the Uncreated Lord, Para Para Great for worlds all
In the Sphere of Muladhara He stands as Na-Ma-Si-Va-Ya
In the Sphere of Fire He stands as Na-Ma-Va-Si-Ya
In the Sphere Sun He stands Va-Si-Ya
In the Sphere of Moon He stands as Va-Si.
Tamil Meaning:
ஆதாரங்களில் ஏனையவற்றிற்கெல்லாம் அடி யாகிய மூலாதாரத்திற்கு உரிய தெய்வ மந்திரம், நகாரம் முதலாக முழுமையாய் மாறாது நிற்கும் திருவைந்தெழுத்தாம். அதற்கு மேல் உள்ள அக்கினி மண்டலத்தில் அம்மந்திரம் அருள் எழுத்து மாறி இடை நிற்க ஏனைய எழுத்துக்கள் முன் நின்றவாறே நிற்க இருக்கும். அதற்குமேல் உள்ள சூரியமண்டலத்தில் பாச எழுத்துக்கள் நீங்க, ஏனைய மூன்றும் முன்நின்றவாறே நிற்க இருக்கும். அதற்கு மேல் யோகத்தால் அடையப்படும் சந்திர மண்டலத்தில் பசு எழுத்து நீங்க, அருளேயான ஏனை இரண்டழுத்தும் அவ்வாறே நிற்க இருக்கும்.Special Remark:
``அதனை யறிந்து சிவயோகி தனது சிவயோகத்தைச் செய்க`` என்பது குறிப்பெச்சம்.திருவைந்தெழுத்து,
மூலாதார மண்டலத்தில் - நமசிவாய - என்றும்,
அதற்குமேல் அக்கினி மண்டலத்தில் - நமவாசிய - என்றும்,
அதற்குமேல் சூரிய மண்டலத்தில் - வாசிய - என்றும்,
அதற்குமேல் சந்திர மண்டலத்தில் - வாசி - என்றும்
நிற்கும் என்பது இதன் தெளிபொருளாதல் காண்க. ``பிற யோகிகள் யோகத்தை அமந்திரமாகவும், பிரணவமாகவும் செய்வாராயினும், சிவயோகி இவ்வாறு திருவைந்தெழுத்து மந்திரத்தால் யோகம் செய்யக்கடவன்`` என்பது குறிப்பால் உணர்த்தியவாறு, இச் சிவயோக நெறியால் பாசமும், அதன்வாதனையால் நிற்கும் பசுத்துவமும் நீங்கச் சிவமாம் தன்மையைப் பெறுவன் என்க.
மூலாதாரத்தை, ``மூலை`` என மறைபொருளாகக் கூறுதல் சித்தமுறை. அது பற்றி,
``மூலை யிருந்தாரை முற்றத்தே விட்டவர்
சாலப் பெரியர்என் றுந்தீபற;
தவத்தில் தலைவர்என் றுந்தீபற``
என்ற திருவுந்தியாரையும் (பா.12) நோக்குக. தற்பரம் - அதிதெய்வம். மாபரன் - பதியாய் (முழுமுதல் தலைவனாய்) நிற்கும் சிவன். ``தற்பரம், மாபரன்`` என்ற இரண்டும் ஆகுபெயராய் அவர்க்குரிய மந்திரத்தைக் குறித்தது, வாளா, ``தரா தலம்`` என்றாரேனும், `அதற்கு மேல் உள்ள தராதலம் என்றல் கருத்தாதல் அறிக. வெப்பு, இடை நின்ற இரு தராதலம், யோகம் இவையும் ஆகுபெயராய் அவ்விடத்து நிற்கும் மந்திரங்களைக் குறித்தன. யோகம் - கூடுதல். வெப்பு, இருமடியாகு பெயர்.
இதனால், `சிவயோகம் செய்வார் அறிதற்குரிய நான் மண்டல மந்திரங்கள் இவை` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage