
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 1. அசபை
பதிகங்கள்

தேவர் உறைகின்ற சிற்றம் பலம்என்றும்
தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றும்
தேவர் உறைகின்ற திருவம் பலம்என்றும்
தேவர் உறைகின்ற தென்பொது ஆமே.
English Meaning:
Glory of ChidambaramChidambalam is where Devas reside,
Chidambaam is where Devas reside,
Thiru Ambalam is where Devas reside,
The Sabha of the South is where Devas reside.
Tamil Meaning:
சிவபெருமானார் தாம் இயல்பாக என்றும் எழுந் தருளியிருக்கின்ற சிதாகாசமாகவே திருவுளத்துக் கொண்டு வெளிநின் றருள்கின்ற தில்லையம்பலமும் மேற்கூறிய ஓரெழுத்தேயாகும்.Special Remark:
``தேவர்`` என்றது சிவபிரானையே. முதல் மூன்று அடிகளிலும் ```தேவர்`` என்பவற்றின்பின் `தாம்` என்பது வருவிக்க. ``சிற்றம்பலம்`` என்பதில் உள்ள சிறுமை, `நுண்மை` என்னும் பொருளதாய், ``சிதம்பரம்`` என்பதில் உள்ள `சித்து` என்னும் பொருளையே குறிக்கும். உபநிடதத்துள் `தகராகாசம்` எனப்படுவதில் உள்ள `தகரம்` என்பதற்கும் `சிறுமை` என்பதே பொருளாதல் அறிக. ``திருவம்பலம்`` என்பதிலுள்ள `திரு` என்பதும் அருளையே குறிப்பது. `சித்து, அருள்` என்னும் வெளிப்படைச் சொற்களாலும்., `சிறுமை, தகரம்` என்னும் குறிப்புச் சொற்களாலும் உணர்த்தப் படுவது சிவனது சக்தியே. அதனால் ``சிற்றம்பலம், சிதம்பரம், திருவம்பலம், தென்பொது`` என்னும் இந்நான்கும் சிவன் இயல்பாய் இருக்கின்ற பரவெளியாய் நிற்பது அவனது சத்தியே என்பது போந்தது. எனவே, சிவன் நிலவுலகத்தார்க்கு அருள் புரிதல் காரணமாகத் தில்லையம் பலத்தையே தனது பரவெளியாக ஏற்று எழுந்தருளியுள்ளான் என்பதை நாயனார் இம்மந்திரத்துள் முதற்கண் உடம்பொடு புணர்த் தலாற் கூறியருளினாராயிற்று. என்று - என்றுகொண்டு. ஊரின் திசை அதன்கண் உள்ள அம்பலத்திற்குப் புணர்த்துரைக்கப்பட்டது. `பொது வும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. அதனால் `அசபை மேற் கூறியவாறு, இலய சிவன் முதலியோர் வடிவாதலேயன்றி` என்னும் பொருள் தோன்றிற்று. ``ஆம்` என்பதற்கு `அசபை` என்னும் எழுவாய், அதிகராத்தால் வந்தியைந்தது.இதனால், அசபை மேற்கூறியாவறு இலயசிவன் முதலியோர் வடிவாதலே யன்றி, இந்நிலவுலகில் அதிகார சிவன் வெளிநிற்கின்ற தில்லையம்பலமாயும் நிற்றல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage