
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 1. அசபை
பதிகங்கள்

ஏழா யிரமாய் இருபதாய் முப்பதாய்
ஏழா யிரத்தும் எழுகோடி தானாகி
ஏழா யிரத்துயிர் எண்ணிலா மந்திரம்
ஏழாய் இரண்டாய் இருக்கின்ற வாறே.
English Meaning:
The Two Became SeveralThe Seven Thousand mantras became Fifty
And then into the Seven with endings diverse,
Thus of the Seven Thousand mantras chanted,
That are beyond thought,
Have as vital the Seven and Two in the ultimate.
Tamil Meaning:
மந்திரங்கள் அளவற்றனவாய் நின்று அளவற்ற உயிர்களில் நிற்பினும் அவை அனைத்தும் ஐம்பதெழுத்திற்குள்ளும், `ஏழு கோடி` என்னும் வகைக்குள்ளும், `ஏழு, இரண்டு` என்னும் வடிவத்துள்ளும், அடங்கி நிற்கும் முறைமை அறியத் தக்கது.Special Remark:
``எண்ணிலா மந்திரம் ஏழாயிரத்துயிர் ஏழாயிரமாய்`` எனக் கூட்டுக. `எழுவகைப் பிறப்பிலும் பலவாய் உள்ள உயிர்`` என்றற்கு ``ஏழாயிரத்துயிர்`` என்றார். ஏழாயிரத்துயிர்க்கும்` என்னும் நான்கனுருபும், முற்றும்மையும் தொகுத்தல் பெற்றன. ``இருபதாய் முப்பதாய்`` என்றது, `ஐம்பதாய்` என்றவாறு. மாதுருகாட்சரங்களை ஈற்றிலுள்ள க்ஷகாரத்தைக் கூட்டி `ஐம்பத்தொன்று` என்றல், கூட்டாது விடுத்து `ஐம்பது` என்றல் ஆகிய இருமரபுகளும் உள்ளன என்க. உயிர்களைக் குறிப்பதாய் இரண்டாம் அடியில் வந்த ``ஏழாயிரத்தும்`` என்பது சொற்பொருட் பின்வருநிலை. `எல்லாப் பொருள்கட்கும் மந்திரம் உண்டு` என்பதைச் சிவஞான போத ஒன்பதாம் சூத்திரத்தின் இரண்டாவது அதிகரண பாடியத்திற் காண்க.கோடி - இறுதி. மந்திரங்கள் அனைத்தும் எழுவகை இறுதி உடையனவாம். அவை:- `நம:, ஸ்வதா, ஸ்வாஹா, வஷட், வௌஷட், பட், ஹும்` என்பன. (ஹும், பட்` - இரண்டும் ஓரிடத்தே இணைந்தும் வரும். அவ்விடத்து, `ஹும் பண்` என நிற்றலும் உண்டு.) `ஏழு, இரண்டு` எனப்பட்டவை பஞ்சாக்கர பேதங்கள். மேல் ``எட்டெழுத்து`` என்றதில் வித்தெழுத்து மூன்றனுள் இறுதி நின்றதை நீக்கி, இங்கு ``ஏழு`` என்றார். அவ்வாறு நிற்றலும் உண்மை பற்றி. இரண்டு, சிகார வகாரங்கள். `அறியத்தக்கது` என்பது சொல்லெச்சம்.
இதனால், மந்திரங்கள் விரிந்தும், ஒடுங்கியும் நிற்குமாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage