
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 1. அசபை
பதிகங்கள்

இருக்கின்ற மந்திரம் ஏழா யிரமாம்
இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை
இருக்கின்ற மந்திரம் சிவன்திரு மேனி
இருக்கின்ற மந்திரம் இவ்வண்ணந் தானே.
English Meaning:
All Mantras Contained in Two-Letter MantraSeven Thousand mantras there exist;
But none, of this potent divine;
This the mantra that is Siva`s Holy Form;
And all mantra is in this contained.
Tamil Meaning:
உண்மையில் உள்ள மந்திரங்கள் அளவற்றன. எந்தப் பொருட்கு மந்திரம் இல்லை! அனைத்து மந்திரங்களும் சிவனது திருமேனியே. அவற்றின் உண்மை இதுவே.Special Remark:
முன்னிரண்டடிகள், ``கற்றது கைமண்ணளவு; கல் லாதது உலகளவு`` 1 என்பதுபோல, அறியப்படாது பல மந்திரங்கள் உள என்பது உணர்த்தின. சிவனுக்குத் திருமேனியாவது அவனது சத்தியேயாகலின், மூன்றாம் அடி மந்திரங்கள் சத்தியின் வடிவமாதல் குறித்ததாம். அதனானே, மந்திரங்கள் அவனது உறுப்புக்களில் நியசிக்கப்படுவதற்குக் காரணமும் கூறியதாயிற்று. `மந்திரங்கள் சிவ சத்தியே` என்பதனை ஈற்றடி உணர்த்திற்று. மூன்றாம் அடியில், `மந்திரம்` என்னும் வட சொல்லின் இகரம் அலகு பெறாது நின்றது.இதனால், மேல் `சத்தி மந்திரமாய் நிற்கும்` எனச் சத்திமேல் வைத்துக் கூறியது, `மந்திரங்கள் சத்தியாம்` என மந்திரங்களின்மேல் வைத்து வலியுறுத்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage