
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- எட்டாம் தந்திரம் - 1. உடலில் பஞ்ச பேதம்
- எட்டாம் தந்திரம் - 2. உடல் விடல்
- எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்
- எட்டாம் தந்திரம் - 4. மத்திய சாக்கிராவத்தை
- எட்டாம் தந்திரம் - 5. அத்துவாக்கள்
- எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
- எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்
- எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை
- எட்டாம் தந்திரம் - 9. முக்குண நிர்க்குணங்கள்
- எட்டாம் தந்திரம் - 10. அண்டாதி பேதம்
- எட்டாம் தந்திரம் - 11. பதினொன்றாந்தானமும் `அவத்தை` எனக்காணல்
- எட்டாம் தந்திரம் - 12. கலவு செலவுகள்
- எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை
- எட்டாம் தந்திரம - 14. அறிவுதயம்
- எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்
- எட்டாம் தந்திரம் - 16. பதி பசு பாசம் வேறின்மை
- எட்டாம் தந்திரம் - 17. அடிதலை அறியும் திறங்கூறல்
- எட்டாம் தந்திரம் - 18. முக்குற்றம்
- எட்டாம் தந்திரம் - 19. முப்பதம்
- எட்டாம் தந்திரம் - 20. முப்பரம்
- எட்டாம் தந்திரம் - 21. பர லக்கணம்
- எட்டாம் தந்திரம் - 22. முத்துரியம்
- எட்டாம் தந்திரம் - 23. மும்முத்தி
- எட்டாம் தந்திரம் - 24. முச்சொரூபம்
- எட்டாம் தந்திரம் - 25. முக்கரணம்
- எட்டாம் தந்திரம் - 26. முச்சூனிய தொந்தத்தசி
- எட்டாம் தந்திரம் - 27. முப்பாழ்
- எட்டாம் தந்திரம் - 28. காரிய காரண உபாதி
- எட்டாம் தந்திரம் - 29. உபசாந்தம்
- எட்டாம் தந்திரம் - 30. புறங்கூறாமை
- எட்டாம் தந்திரம் - 31. அட்ட தள கமல முக்குண அவத்தை
- எட்டாம் தந்திரம் - 32. நவாவத்தை அபிமானி
- எட்டாம் தந்திரம் - 33. சுத்தா சுத்தம
- எட்டாம் தந்திரம் - 34. மோட்ச நிந்தை
- எட்டாம் தந்திரம் - 35. இலக்கணாத் திரயம்
- எட்டாம் தந்திரம் - 36. `தத்துவமசி` மகாவாக்கியம்
- எட்டாம் தந்திரம் - 37. விசுவக் கிராசம்
- எட்டாம் தந்திரம் - 38. வாய்மை
- எட்டாம் தந்திரம் - 39. ஞானிகள் செயல்
- எட்டாம் தந்திரம் - 40. அவா அறுத்தல்
- எட்டாம் தந்திரம் - 41. பத்தியுடைமை
- எட்டாம் தந்திரம் - 42. முத்தியுடைமை
- எட்டாம் தந்திரம் - 43. சோதனை
Paadal
-
1. அஞ்சும் கடந்த அனாதிபரம் தெய்வம்
நெஞ்சமுந் தாய நிமலன் பிறப்பிலி
விஞ்சும் உடலுயிர் வேறு படுத்திட
வஞ்சத் திருந்த வகையறிந் தேனே.
-
10. விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய்
இருந்த இடத்திடை யீடான மாயை
பொருந்தும் துரியம் புரியில்தா னாகும்
தெரிந்த துரியத்துத் தீதல லாதே.
-
11. உன்னை யறியா(து) உடலைமுன் நான்என்றாய்
உன்னை யறிந்து துரியத் துறநின்றாய்
தன்னை யறிந்தும் பிறவி தணவாதால்
அன்ன வியாத்தனம லன்னென் றறிதியே.
-
12. கருவரம பாகிய காயத் துரியம்
இருவரும் கண்டீர் பிறப்பிறப் புற்றார்
குருவரம் பெற்(று)அவர் கூடிய பின்னை
இருவரும் இன்றிஒன் றாகிநின் றாரே. -
13. அணுவின் துரியத்தில் ஆன நனவும்
அணுஅசை வின்கண் ஆன கனவும்
அணுஅசை விற்பரா தீதம். சுழுத்தி
பணியில் பாதுரி யம்பரம் ஆமே.
பரதுரி யத்து நனவும் பரந்து
விரிசகம் உண்ட கனவும்மெய்ச் சாந்தி
உருவுறு கின்ற சுழுத்தியும் ஓவத்
தெரியும் சிவதுரி யத்தனு மாமே.
-
14. பரமாம் நனவின்பின் பாற்சகம் உண்ட
திரமார் கனவு சிறந்த சுழுத்தி
உரமாம் உபசாந்தம் முற்றல் துறவே
தரனாம்சிவதுரி யத்தனும் ஆமே.
-
15. சீவன் துரியம் முதலாகச் சீராக
ஆவ சிவன்துரி யாந்தம் அவத்தைபத்(து)
ஓவும் பரானந்தி உண்மைக்குள் வைகியே
மேவிய நாலேழ் விடுத்துநின் றானே.
-
16. பரம்சீவன் மேலாம் பரமம் பரத்தின்
பரம்பரன் மேலாம் பரநன வாக
விரிந்த கனாஇடர் வீட்டும் சுழுனை
உரந்தகும் ஆனந்திஆம் உண்மை தானே.
-
17. சார்வாம் பரசிவம் சத்தி பரநாதம்
மேலாய விந்து சதாசிவம் மிக்கோங்கிப்
பாலாய்ப் பிரமன் அரிஅமர் ஆபதித்
தேவாம் உருத்திரன் ஈசன்ஆம் காணிலே.
-
18. கலப்பறி யார்கடல் சூழ்உல கேழும்
உலப்பறி யார்உடலோடுயிர் தன்னை
அறப்பறிந் திங்கர சாளகி லாதார்
குறிப்பது கோல கடலது வாமே.
-
19. பின்னை யறியும் பெருந்தவத் துண்மைசெய்
தன்னை யறியின் தயாபரன் எம்மிறை
முன்னை யறிவு முடிகின்ற ஞானமும்
என்னை யறியலுற் றின்புற்ற வாறே.
-
2. சத்தி பராற்பரம் சாந்தி தனில் ஆன
சத்தி பரானந்தம் தன்னில் சுடர்விந்து
சத்தி அம் மாயை தனுட்சக்தி ஐந்துடன்
சத்தி பெறும்உயிர்தான் அங்குற் றாறுமே.
-
20. பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்
பொன்னில் மறைந்தது பொன்னணி பூடணம்
தன்னை மறைத்தன தன்கர ணங்கள்தாம்
தன்னில் மறைந்தன தன்கர ணங்களே.
-
21. மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே.
-
22. ஆறா றகன்று நமவிட் டறிவாகி
வேறான தானே யகாரமாய் மிக்கோங்கி
ஈறார் பரையின் இருளற்ற தற்பரன்
பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே.
-
23. துரியத்துல் ஓரைந்தும் சொல்அகா ராதி
விரியப் பரையின் மிகுநாதம் மந்தம்
புரியப் பரையின் பராவத்தா போதம்
திரியப் பரமாமாம் துரியம் தெரியவே.
-
24. ஐந்தும் சகலத்(து) அருளால் புரிவுற்றுப்
பந்திடும் சுத்த அவத்தைப் பதைப்பினில்
நந்தி பராவத்தை நாடச் சுடர்முனம்
அந்தி யிருள்போல ஐம்மலம் மாறுமே.
-
25. ஐயைந்து மட்டுப் பகுதியும் மாயையாம்
பொய்கண்ட மாயேயந் தானும் புருடன்கண்(டு)
எய்யும் படியாய் எவற்றுமாய் அன்றாகி
உய்யும் பராவத்தை யுள்உறல் சுத்தமே.
-
26. நின்றான் அருளும் பரமும்முந் நேயமும்
ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும்
சென்றான் எனைவிடுத் தூங்கிற்செல் லாமையும்
நன்றான ஞானத்தின் நாதப் பிரானே.
-
3. ஆறாறுக் கப்பால் அறி(வு)ஆர் அறிபவர்
ஆறாறுக் கப்பால் அருள் ஆர் பெறுபவர்
ஆறாறுக் கப்பால் அறிவாம் அவர்கட்கே
ஆறாறுக் கப்பால் அரன்இனி தாமே.
-
4. அஞ்சொடு நான்கும் கடந்(து) அகமேபுக்குப்
பஞ்சணி காலத்துப் பள்ளி துயில்கின்ற
விஞ்சையர் வேந்தனும் மெல்லிய லாளொடு
நஞ்சற நாடின் நயஞ்செய்யு மாறே.
-
5. உரிய நனாத்துரி யத்தின் இவன்ஆம்
அரிய துரிய நனாவாதி மூன்றில்
பரிய பரதுரி யத்தில் பரன்ஆம்
திரிய வரும்துரி யத்தில் சிவமே.
-
6. பரமாம் ஆதீதமே பற்றறப் பற்றப்
பரமாம் ஆதீதம் பயிலப் பயிலப்
பரமாம் ஆதீதம் பயிலாத் தபோதனர்
பரமாகார் பாசமும் பற்றொன் றறாதே.
-
7. ஆயும்பொய் மாயை அகம்புற மாய்நிற்கும்
வாயும் மனமும் கடந்த மயக்கறின்
தூய அறிவு சிவானந்த மாகிப் போய்
வேயும் பொருளாய் விளைந்தது தானே.
-
8. துரியப் பரியில் இருந்தஅச் சீவனைப்
பெரிய வியாக்கிரத் துள்ளே புகவிட்டு
நரிகளை ஓடத் துரத்திய நாதர்க்(கு)
உரிய வினைகள்நின்(று) ஓலமிட் டன்றே.
-
9. நின்ற இச் சாக்கரம் நீள்துரி யத்தினில்
மன்றறும் அங்கே மணம்செய்ய நின்றிடும்
மன்றன் மணஞ்செய்ய மாயை மறைந்திடும்
அன்றே இவனும் அவன்வடி வாமே.