
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை
பதிகங்கள்

ஆயும்பொய் மாயை அகம்புற மாய்நிற்கும்
வாயும் மனமும் கடந்த மயக்கறின்
தூய அறிவு சிவானந்த மாகிப் போய்
வேயும் பொருளாய் விளைந்தது தானே.
English Meaning:
Freed of Maya, Jnana Dawns and Bliss EnsuesThe Maya we seek to understand
Envelops Soul, inside and out;
The hypnosis it creates baffles thought and word;
When you are freed from it,
Your knowledge becomes purified;
It is transmuted into Sivananda
And becomes a protective roof over you.
Tamil Meaning:
பல சமயத்தாராலும், `எத்தன்மைத்து` என ஆராயப் படுவதாய், அருவமாய் நிற்கும்மாயை, சிவத்திற்கு வேறும் ஆகாமல், ஒன்றும் ஆகாமல் இடைப்பட்டதாய் இருக்கும். அதனால், வாக்கு மனங்கள் நீங்கிய பின்பும் வாசனை யளவாய் நிற்கின்ற அந்த மாயை அறவே நீங்கினால், அறிவு முழுத் தூய்மை அடைந்து, அதனால் சிவானந்த மயமாகிப் பின்பு அந்தச் சிவானந்தத்தால் விழுங்கப்பட்ட பொருளாகிவிடும்.Special Remark:
`பொய்` என்றது கண்ணுக்குப் புலனாகாமையே. அகம் புறமாய் நிற்றல், சிவத்தில் வியாப்பியமாய உயிரில் வியாத்தியாய் நிற்றல், `வாக்கு, மனம்` என்பவற்றின் உண்மைப் பொருளை, `சாக்கிரந் தன்னில் அதீதம் தலைப்படின்` என்னும் மந்திரத்து8 உரையிற் காண்க. வேய்தல் - மூடுதல்; அகப் படுத்தல். `விளைவது` என எதிர்காலத்தில் கூறற்பாலது, துணிவு பற்றி, ``விளைந்தது`` என இறந்த காலமாகக் கூறப்பட்டது.இதனால், பராவத்தையில் அதீதத்தில் செல்லவேண்டுதற்குக் காரணம் கூரப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage