
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை
பதிகங்கள்

விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய்
இருந்த இடத்திடை யீடான மாயை
பொருந்தும் துரியம் புரியில்தா னாகும்
தெரிந்த துரியத்துத் தீதல லாதே.
English Meaning:
Maya Lights the Path to Turiya and The RemainsIf in Jagrat State
Where Jiva is,
He upward, ascends,
Well may Maya serve
A lamp to light his path;
Then, when he reaches Turiya State,
He his Self realizes;
Albeit in that Turiya State
Maya will still be,
(The Soul should further ascend to the Turiyatita State).
Tamil Meaning:
சிவத்திற்கும், ஆன்மாவிற்கும் இடையே நிற்பதாகிய மாயை தனது நிலையினின்று விருத்திப் படுமாயின் ஆணவ இருளில் உள்ள உயிர்கட்கு விளக்குப் போல உதவும். அதனாலேயே மத்தியாலவத்தை நிகழும் துரியத்தில் ஆன்மாப் பாசத்தினின்றும் நீங்காது அழுந்திநிற்கும். (ஆதலின் அஃது ஆன்மா அடைதற்குரிய துரியம் அன்று.) அஃது அடைதற்குரிய துரியம் பரதுரியமே. அதனை அடைந்தால் அது பாசங்கள் நீங்கித் தூயதாம்.Special Remark:
`இடையீடான மாயை இருந்த இடத்து விரிந்திடின் விளக்காய்ச் சாக்கிரம் மேவும்` என மாற்றி இதன் பின் ஈற்றடியைக் கூட்டுக. `ஆய்` என்பதை ஆக` எனத் திரிக்க. `தெரிந்த துரியம்` என்பது, `எல்லார்க்கும் அனுபவமாய் அறியப்பட்டதுரியம்` என மத்தியாலவத்தைத் துரியத்தைக் குறித்தது. `தீது அகலாது` என்றதனால் அது பொருந்தி தாத் துரியம் ஆயினமையின், `பொருந்துந் துரியம்` என்றது பரதுரியம் ஆயிற்று. தான் ஆதல், ஆன்மாப் பாசமாய் இருந்த நிலையின் நீங்கித் தானேயாய் இருத்தல்.இதனால், `துரியம்` என்பது உயர்வுடையது போலக் கூறப்பட்டாலும், உண்மையில் உயர்ந்த துரியம் பர துரியமே` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage