
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை
பதிகங்கள்

பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்
பொன்னில் மறைந்தது பொன்னணி பூடணம்
தன்னை மறைத்தன தன்கர ணங்கள்தாம்
தன்னில் மறைந்தன தன்கர ணங்களே.
English Meaning:
Way of Self-Realization Through Thought ProcessThink of gold jewellery,
Thought of gold metal is not;
Think of gold metal
Thought of jewellery is not;
Think of sense organs, Self is not;
Think of Self, sense organs are not.
Tamil Meaning:
பொன்னால் செய்யப்பட்ட அழகிய அணி கலன்கள் தம்மிடத்துப் பொன் உள்ளதாயினும் அதனை உரைச் செய்யாது மறைத்துத் தமது அழகினையே உணரப் பண்ணி மக்களை மயக்குகின்றது. ஆயினும் அந்த அணிகலன்களின் செயற்கை நலன்களை அழித்துவிட்டால், அணிகலனாய் இருந்த பொருள்கள் அழியாதிருப்பினும் அவை பொன்னாகி விட்ட அதனுள்ளே மறைந்து விடும். அவைபோல, சார்ந்ததன் வண்ணம் ஆகின்ற ஆன்மாவைப் பெத்தகாலத்தில் அதனுடைய தனு கரணங்கள் தம் வயப்படுத்தித் தம்மயம் ஆகச் செய்து, ஆன்மாத் தன்னைத் தான் அறியாதபடி மறைத்து அதனைத் தாமென்றே மயங்கிச் செய்துவிடுகின்றன. ஆயினும், ஆன்மாக் குருவருளால் ஞானத்தைப் பெற்ற முத்தி காலத்தில் உண்மை ஞானம் பொது ஞானத்தை அழித்துவிடுதலால், ஆன்மாவில் வியாப்பியமாய்த் தமக்கெனச் சுதந்திரமின்றி ஆன்மாவின் வழியே செயற்படுகின்ற தனு கரணங்கள் தாம் அழிந் தொழியாது ஆவ்வான்மாவின் வயப்பட்டு முன்போல மருள் வழியில் இயங்காமல், ஆன்மாவைப் போலவே அருள் வழியில் இயங்கும்.Special Remark:
இவையிரண்டிற்கும் காரணம், ஆன்மாவின் அபக்குவமும், பக்குவமுமேயாகும். `ஆன்மா அபக்குவ காலத்தில் மாயை கன்மங்களின் வழிபட்டுச் சகலாவத்தையையும், பக்குவ காலத் -தில் அதனின் நீங்கி நின்மலாவத்தையையும், வீடுபெறும் காலத்தில் பராவத்தையையும் அடையும்` என்பது இதனால் ஆன்மாவின் மேல் வைத்துக் கூறப்பட்டது. இஃது எடுத்துக் காட்டுவமை.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage