
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை
பதிகங்கள்

ஐந்தும் சகலத்(து) அருளால் புரிவுற்றுப்
பந்திடும் சுத்த அவத்தைப் பதைப்பினில்
நந்தி பராவத்தை நாடச் சுடர்முனம்
அந்தி யிருள்போல ஐம்மலம் மாறுமே.
English Meaning:
Pure (Suddha) Experience and Supreme (Para) ExperienceBeyond Jiva Experiences
In Sakala condition of Jiva,
These five experiences are by Grace attained;
Then follows the Suddha Avasta (Pure Experience) State;
That in intensity experiencing,
The Para Avasta (Supreme Experience) of Nandi is attained;
Then, as before light darkness is dispelled
The Five Malas for ever vanish.
Tamil Meaning:
சாக்கிரம் முதலிய ஐந்தவத்தைகளையும் சகலத்தில் மாயா கருவிகளால் அடையாது, திருவருளால் அடைந்து, (எனவே, `மேலா லவத்தையையும் கடந்து நின்மலாவத்தையை அடைந்து` என்றதாம்.) சகலத்திற் சுத்தமாகிய அந்த அவத்தைகளில் மேலே பாய்ந்தும், கீழே வீழ்ந்தும் பந்துபோல அலைகின்ற அலைவினால் அவ்வலைவு நீங்கப் பெறுகின்ற உண்மைச் சுத்தமாகிய பராவத்தையில் நாட்டம் உண்டாகுமானால், அந்த நாட்டத்தின் முன் ஐந்து மலங்களும் அந்திக் காலத்தில் விளக்கின்முன் இருள் நில்லாது நீங்குதல் போல நில்லாது நீங்கும்.Special Remark:
`சகலத்து` எனவும, `அருளால்` எனவும் கூறிய வற்றால், புரியப்படுவன நின்மலாவத்தைகளாயின. தானே நிகழ்வன வற்றை ஆன்மாநிகழ்வித்துக் கொள்வது போலவைத்து, `புரிவுற்று` என்றார். பந்து இடும் - பந்தினை வீசுவது போல நிகழும் நந்தி - சிவன்.இதனால், `ஆன்மாநின்மலாவத்தையையும் கடந்து, பரா வத்தையை எய்திய பொழுதே உண்மையில் தூயதாம்`என்பது கூறப் பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage