
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை
பதிகங்கள்

அணுவின் துரியத்தில் ஆன நனவும்
அணுஅசை வின்கண் ஆன கனவும்
அணுஅசை விற்பரா தீதம். சுழுத்தி
பணியில் பாதுரி யம்பரம் ஆமே.
பரதுரி யத்து நனவும் பரந்து
விரிசகம் உண்ட கனவும்மெய்ச் சாந்தி
உருவுறு கின்ற சுழுத்தியும் ஓவத்
தெரியும் சிவதுரி யத்தனு மாமே.
English Meaning:
Beyond Four States in Turiya is Para TuriyaIf Jiva in Turiya State
Having experienced in succession
Jagrat, Svapna, Sushupti states within,
Perseveres further,
Then he enters Para Turiya;
There verily Jiva becomes Para.
End of Para Turiya is Siva Turiya
Succeeding Para Turiya Jagrat State
Is the Para Turiya Svapna State
That engrosses the universe entire;
Then is Para Turiya Sushupti State
Where Upasanta (Peace beyond understanding) is;
That transcending, Jiva reaches Siva Turiya State.
Tamil Meaning:
(`மேலாலவத்தை` என்றும், சகலத்தில் `சுத்தா வத்தை` என்றும் கீழ் உள்ளவைகளை நோக்கிச் சிறப்பித்துச் சொல்லப் படுகின்ற யோகாவத்தைகள் அது காரணம் பற்றியே `துரியம்` எனப்படும். (துரியம் - மேற்பட்டது) ஆயினும், அதில் சீவத் தன்மை நீங்காமையால் அவை சீவதுரியமேயாம். அவையே இங்கு `அணுவின் துரியம்` என்றும் `அணுவசைவு` என்றும் சொல்லப்படுகின்றன.சீவ துரியமாகிய யோகாவத்தையில் உள்ள, `சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம்` என்பன தாழ்வுடையனவே - என அறியப்பட்டால், அதன் பின்பே பராவத்தை உளதாகும். அந்தப் பராவத்தையே அவத்தைகளில் எல்லாம் மேலான அவத்தை.
Special Remark:
`ஆகவே - மேலாலவத்தை - எனக் கூறப்படுதலே பற்றி அவற்றையே `பராவத்தை` - என மயங்கற்க` என்பதாம்.`யோகில் - தருவதோர் சமாதி தானும்
தாழ்ந்து பின் சனனம் சாரும்`
-சுபக்கம் சூ.5.34.
என்னும் சிவஞான சித்தி மொழி மேலேயும் எடுத்துக்காட்டப் பட்டது. செய்யுள் நோக்கிச் சுழுத்தி இறுதியில் வைக்கப்பட்டது. பராதீதம் - பரமும் அதீதமும்; உம்மைத் தொகை. இதன் பின்னும், `சுழுத்தி` என்பதன் பின்னும் எண்ணும்மை விரிக்க. `பரம்` என்றது துரியத்தை. பணிதல் - தாழ்தல். அஃது இங்கு அறிபவனது அறிவில் அத்தன்மை யதாய் விளங்குதலைக் குறித்தது.
இதனால், பராவத்தை பற்றியதோர் ஐயம் அறுக்கப்பட்டது.
(இதன் பின் பதிப்புக்களில் காணப்படுகின்ற `பரதுரியத்து நனவும்` என்னும் பாடல் மிகையாகத் தெரிகின்றது)
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage