
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை
பதிகங்கள்

அஞ்சும் கடந்த அனாதிபரம் தெய்வம்
நெஞ்சமுந் தாய நிமலன் பிறப்பிலி
விஞ்சும் உடலுயிர் வேறு படுத்திட
வஞ்சத் திருந்த வகையறிந் தேனே.
English Meaning:
Mystery of Parting Life From BodyThe Lord is the Para;
He is beginningless;
He is beyond five states of experience,
He is the Pure One,
Seated within the heart;
He is birthless;
Why this lovely body and life
He parts—
That mystery, I knew.
Tamil Meaning:
உருவம் இரண்டு, (வித்தை, ஈசுரன்) உருவாருவம் ஒன்று, (சதாசிவன்) அருவம் இரண்டு (சத்தி, சிவன்) ஆகமுத்திறத்து ஐந்துநிலைகளையும் கடந்து, தன்னியல்பில் நிற்கும் பரசிவனே சுத்த சிவன். (மேற்கூறிய ஐந்தும் அபர சிவங்களாம்.) பரசிவன் - மனத்தையும் கடந்தவன். இயல்பாகவே மலங்கள் இல்லாதவன். எனவே, மாயா சரீரங்களை எடாதவன். ஆகவே, அவன் (தனது திருவருள் காரணமாக) மலங்களுட் பட்டனவாயினும் உண்மையில் அவற்றினும் மேற்பட்ட உயிர்களை முன்னர் மாயாகாரியமாகிய உடலோடு ஒன்று படுத்திப் பின்பு அதனினின்றும் வேறுபடுத்தி உய்வித்தற் பொருட்டு அவ்வுயிர்கள் தன்னை அறியாதபடி அவற்றின் அறிவினுள்ளே கள்வன் போல ஒளித்திருந்தான். எனினும், அவனது கள்ளத்தை நான் அவன் அருளாலே அறிந்து கொண்டேன்.Special Remark:
`அதனால் பராவத்தையில் உள்ளேன்` என்பது குறிப் பெச்சம். `நீவிரும் இதனை எய்தலாம்` என்பது கருத்து. `அஞ்சு` என்றது ஐம்மலங்களை எனின், `நின்மலன்` என்பது வெற்றெனத் தொடுத்தல் ஆதலும், `தடத்த சிவத்தின் மேற்பட்ட சொரூப சிவமே பரசிவம்` என்பது பெறப்படாமையும் அறிக. `அனாதி` என்றது, செயற்கையோடு கூடாத இயற்கையைத் குறித்தது. `தெய்வம்` என்பது `திவ்வியம்` என்னும் பொருட்டாய்த் தூய்மையை உணர்த்திற்று. `நெஞ்சமும்` என்னும் உம்மை, `நாவையேயன்றி` என, இறந்தது தழுவி நின்றது. `மனம், வாக்கு` - என்பவற்றின் உண்மைப் பொருளை, `சாக்கிரந்தன்னில் அதீதம் தலைப்படின்` என்னும் மந்திரத்தின்* உரையிற்காண்க. தாய - கடந்த, `விஞ்சும் உயிர்` எனக் கொண்டு கூட்டுக. `உயிருடல்` என்றே பாடம் ஓதுதலும் ஆம். வேறு படுத்துதல் கூறினமையால், முன்பு ஒன்றுபடுத்தினமை பெறப்பட்டது. `திருவருளால்` என்பதும் `அவன் அருளால்` என்பதும் ஆற்றலால் கொள்ளக் கிடந்தன.இதனால், `பராவத்தைக்கு நிலைக்களம் பரம்பொருள்` என்பதும், அதன் சிறப்பியல்புகளும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage