
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை
பதிகங்கள்

கலப்பறி யார்கடல் சூழ்உல கேழும்
உலப்பறி யார்உடலோடுயிர் தன்னை
அறப்பறிந் திங்கர சாளகி லாதார்
குறிப்பது கோல கடலது வாமே.
English Meaning:
True KnowledgeKnowing that not
They rule not the (Spiritual) Kingdom;
In pomp and vanity they indulge;
That indeed is sorrow;
They know not, He pervades all;
They know not
The sea-girl seven Worlds
Will a shamble be;
They know not
That Siva with Jiva and Body
Commingling stands.
Tamil Meaning:
சிவன் தமது அறிவினுள் அறிவாய்க் கலந்திருத் தலையும், `பூவுலகம் முழுதும் ஒரு காலத்தில் முற்று அழிந்தொழியும்` என்பதையும் அறியாதமடவோர், உடலோடு கலப்பினால் ஒன்றாய் இருக்கின்ற உயிர் பொருளால் வேறாதலை உணர்ந்து உடம்பையே தாமாகப் பற்றி நின்று, அதனால் இவ்வுலகத்திற்றானே அருளரசு ஆள மாட்டுவாரல்லர். அவர் அத்தகைய நிலையை அடைய வேண்டின், அவர்கள் குறிக்கொளத் தக்கது சிவனது தடத்தத் திருமேனிகளை எழுதி வைக்கும் உள்ளமாகிய கிழியேயாம்.Special Remark:
``உயிரா வணம் இருந்து உற்றுநோக்கிஉள்ளக் கிழியின் உருவெழுதி,
உயிரா வனஞ்செய்திட் டுன்கைத் தந்தால்
உணரப் படுவாரோடு ஒட்டி வாழ்தி``*
என அப்பரும் அருளிச் செய்தார். அவ்வருள்மொழியால், அஃது யோகப் பயிற்சியானே கூடும்` என்பது விளங்கும்.
`கடல் சூழ் உலகு ஏழு` ஆவன, நாவலம் பொழில் முதலிய ஏழு பொழில்கள். தாம் உள்ள இடத்து உள்ளவர்களை உள்ளத்துட் கொண்டே ஓதுகின்றார் ஆதலின், பூவுலகத்தின் நிலையாமையையே எடுத்துக் கூறினார். பூவுலகமும் ஏழ்கடலும் ஏழ்பொழிலுமாய் விரிந்து கிடத்தலின், `இவை முழுதும் எஞ்சாது அழிந்தொழிதலும் உளதாகுமோ` என மயங்குவர் என்றற்கு ``கடல் சூழ் உலகேழும் உலப் பறியாது`` என்றார். பறிதல் - நீங்குதல். `அலப்பறிந்து` என்பது பாடம் அன்று. `அறப்பிரிந்து` என ஓதலும் ஆம். இதனுள் ஈரடி எதுகை வந்தது.
இதனால், `பராவத்தை நிலையை அடைதற்கு அந்நிலையில் நிற்கும் சிவனைச் சகலாவத்தையிற்றானே பாவனை முறையால் வழிபடுதல் வழியாகும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage