
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை
பதிகங்கள்

நின்றான் அருளும் பரமும்முந் நேயமும்
ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும்
சென்றான் எனைவிடுத் தூங்கிற்செல் லாமையும்
நன்றான ஞானத்தின் நாதப் பிரானே.
English Meaning:
Lord As Guru Guides the Soul`s JourneyAs Grace, He stood
As Param, He stood
As Love, He stood;
As one Form merged,
He stood;
He transcended experiences all,
But abandoned me not
He, the Lordly Guru, the Natha,
Of Divine Jnana.
Tamil Meaning:
பரம்பொருளை அறிய அவாவிநிற்கின்ற சுத்தான் மாவும், அதற்கு அதனை அறிதற்குத் துணைபுரிந்து அதன் அறிவுக்கு அறிவாய் நிற்கின்ற திருவருளும், அவ்வருளின் துணையால் அந்த ஆன்மாவால் அறியப்படுகின்ற பரம் பொருளும் ஆகிய மூன்று உயர் பொருள்களும், ஆன்மாவினிடத்து மூவகை உடம்புகளாய் நிற்கின்ற தத்துவங்களும், அவற்றைச் செலுத்துகின்ற திரோதான சத்தியும் நீங்கினவிடத்து ஒன்றாய்ப் பொருந்திவிடும். அஃதன்றியும், சிவன் பின்னர் அந்த ஆன்மாவைவிட்டுப் பிரியாத நிலைமையும் உண்டாகும்.Special Remark:
`நின்றான்` என்பதிலும் எண்ணும்மை விரிக்க `முன்னேயமும்` என்பது பாடம் அன்று. நேயம் - அன்பு; விருப்பம், விருப்பத்திற்குரிய பொருளை `விருப்பம்` என்றார். முந்நேயம் - திரிபுடி. அவை `ஞாதுரி, ஞானம், ஞேயம்` என்பன. இவைமூன்றும் வேறு வேறாய்த் தோன்றுங்காறும் `அனுபவம்` என்பது இல்லையாம். சிவத்தை உணர்தல் சிவஞானத்தாலன்றிக் கூடாமையால், பிற மதத்தினர் என்ன கூறினாலும் சித்தாந்தம் `ஞானம்` என்பது சிவ ஞானத்தையே. அது திருவருளேயாதல் அறிக. உபாதிகளைச் செலுத்துதல் பற்றித் திரோதான சத்தியும், `உபாதி` என உபசரித்துக் கூறப்படும். `சென்ற` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்த லாயிற்று. சென்ற ஆன் - நீங்கிய அவ்விடத்து. எங்கு - வேறிடம். `சொல்லாமையும்` என்னும் உம்மை இறந்தது தழுவிய எச்சம். இதன் பின்னும் `மருவும்` என்பதனைக் கூட்டுக. `உருவும், உபாதியும் சென்ற ஆன், நின்றானும் ... ... ... ஒன்றாய் மருவும்; நன்றான ஞானத்தின் நாதப் பிரான் (ஞானத்தின் நாதன் - திருவருளுக்குத் தலைவன்) எனை விடுத்து ஊங்கிற் செல்லாமையும் மருவும்` எனக் கூட்டி முடிக்க `ஊங்கிற் செல்லாமை` என்பதை, `எங்கெழுந்தருளுவது இனியேl என்பது போலக் கொள்க.இதனால், பராவத்தை எய்துமாறும், அதன்கண் நிகழும் அனுபவமும் கூறும் முகத்தால் அதனது மேன்மை எடுத்தோதி முடிக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage